இந்த பத்து பாட்டி வைத்தியம் தெரிஞ்சா போதும் டாக்டர் வீட்டையே மறந்துடலாம்

 
health

கோடை காலத்தைக் கடப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதனால் வழக்கத்தைவிட கூடுதலான ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருத்தல் அவசியம்.

இரைப்பை சம்ந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது சரியான உணவுப் பழக்கம் தான்.

உடற்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதைத் தாண்டி, உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் கடந்தும் வயிறு மற்றும் உடல்  சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படாமலிருக்க சில டிப்ஸ் 

1)தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

2) தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

3) வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

4) உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

5) அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

6) குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

7) வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

8) வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

9) மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

10) தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.