உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது உண்டாகும் அறிகுறிகள்
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது அது சில அறிகுறிகளை வெளிப்படுத்தும் .அப்போது நாம் அதை அலட்சிய படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது .இந்த அறிகுறிகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.உதாரணமாக மார்பில்வலி ,உடல் எடை அதிகரிப்பு ,மஞ்சள் நிற தோல் ,கால் மற்றும் உடலில் ஏற்படும் பிடிப்புகள் .அதிக வியர்வை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்
2.இந்த உணவுப் பொருட்களால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது
3.இனிப்புகளில் இருக்கும் சர்க்கரை உடைந்து கொழுப்பாக மாறுகிறது. இதன் காரணமாக கெட்ட கொழுப்பின் அளவு நரம்புகளில் அதிகரிக்கத் தொடங்குகிறது.
4.கெட்ட கொழுப்பை குறைக்க, சர்க்கரை, இனிப்பு பலகாரங்கள், மிட்டாய்கள், குக்கீகள், கேக்குகள், ஃப்ரூட் ஷேக்குகள், இனிப்புகள் ஆகியவற்றை உங்கள் உணவு பட்டியலில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும்.
5.எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும் .இதை உண்ணும் போக்கு இந்தியாவில் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் இதன் காரணமாக, நமது இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது.