மருந்தை விட இந்த வழிமுறைகளால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்

 
sugar

மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.
உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். 
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்

webdunia

பொதுவாக சக்கரை நோய் உள்ளவர்கள் பயந்து கொண்டே இருப்பார்கள் அவ்வாறாக இல்லாமல் இருப்பது நல்லது. உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் அதனை பற்றியே யோசித்து கொண்டு இருப்பார்கள்.அதனால் நோய் பற்றிய கவலை இல்லாமல் மகிழ்ச்சி உடன் இருக்க வேண்டும்.

சக்கரை நோயால் பாதிக்க பட்டவர்கள் அளவு கடந்த கோபம் , கவலை , துக்கம் இருக்கும். அதனை கட்டுப்படுத்தி கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.

சக்கரை நோயாளிகள் எப்போதும் உணவு முறையை கடைபிடிப்பது தவறு . உடலில் சக்கரை அளவு கூடும் போதும் குறையும் போதும் அதற்கு ஏற்றாற்போல உணவு பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

சிலர் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் , என்பதை நினைத்து கவலை அடைகின்றனர் .

தம்மை சுற்றி உள்ளவர்களிடம் இருந்து ஆதரவு இல்லாதபோது அவர்கள் மேலும் கவலை அடைகின்றனர்.

உடலில் சக்கரை அளவு குறைந்து விடும் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது .

எந்த நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்று குழப்பம் ஏற்படும்.

சிலர் எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்களாகவே இருக்கின்றனர் , அவர்கள் மற்ற விஷயங்களை பற்றி யோசிக்காமல் தங்கள் ஆரோக்கியம் பற்றி யோசித்தால் போதுமானது .

நீங்கள் சோகமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும் போது மற்றவர்களிடம் தயங்காமல் உதவி கேளுங்கள் , நண்பர்களிடம் நன்றாக பேசுங்கள் , நட்பு வட்டாரங்களை பெருகி கொள்ளுங்கள் ..