குண்டாயிருக்கிறவங்களை கண்டால் சர்க்கரை நோய்க்கு பிடிக்குமா ?

 
sugar

ஒரே ஒரு சர்க்கரை நோய் வந்துவிட்டால் ,அது பல நோய்களுக்கு வாசலை திறந்து வைக்கும் .அந்தளவுக்கு அது டேஞ்சரான நோயாகும் .அதனால் அதை வரும் முன் காப்பது சிறந்த வழியாகும் ,மேலும் உடல் பருமனுக்கும் சுகருக்கும் சம்பந்தம் உண்டு என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்

sugar

நீரிழிவு நோய் வந்து விட்டால் போதும்  பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய் என பல விதமான நோய்கள் வரிசையாக நம்மை தக்க தயாராக இருக்கும் . இதனை ஒழிக்க ஒரே வழி உடல் எடையை கூடாமல் ,சீராக வைத்து கொள்வது மட்டுமே சிறந்த தீர்வு ஆகும் .

உடல் பருமனுக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள சம்மந்தம் உண்டா ?என்று வினா எழுப்பினால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும் . இன்சுலின் அளவையும் பசியையும் கட்டுப்படுத்தும் உடலில் உள்ள கொழுப்புக்கும் ஹார்மோன்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் பொழுது சர்க்கரை நோயும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் எடையை 5-10%வரை குறைத்தால் சர்க்கரை நோய் நம்மை விட்டு ஓடி விடும் என்பதை வல்லுனர்கள் ஆராய்ச்சியில் நிருபித்துள்ளனர்.

உடல் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்:- உடல் குறைவதால் இதய பிரச்சனை முதல் நீரிழிவு ,கொலஸ்ட்ரால் பிரச்சனை எதுவும் வராமல் தடுகின்றது. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைவதால் உடல் ஆரோக்கியமாக விளங்கும். முக்கியமாக இன்சுலின் அளவை சீராக உதவுகிறது. இதனால், உடல் எடையை குறைத்தால் சர்க்கரை நோயால் வரும்  ஆபத்து நம்மை நெருங்கவே நெருங்காது என்பதால் வெயிட்டை குறைப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம் நண்பர்களே !..