நாம் டீ குடிக்கிறோமா ?இல்லை விஷத்தை குடிக்கிறோமா ?-பதறாம படிங்க

 
tea

ஏழைகளும், கீழ்தட்டு, நடுத்தட்டு வர்க்கமும் இந்தியாவில் வாங்கிப் பயன்படுத்தும் தேயிலை கலப்படக் குப்பை என்ற பகீர் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல இடங்களில் அரசு அதிகாரிகளால், குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் திடீர் சோதனைகளில், இந்த உண்மை வெளியாகி உள்ளது. கலப்பட டீ தொழிற்சாலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

தரமான தேயிலைத் தூள் கிலோ ரூ.400 முதல் ரூ.550 வரை விற்கப்படும்போது, தேநீர் கடைகளில் நேரடியாகவே கலப்படத் தேயிலைத் தூள் கிலோ ரூ.220-க்கு விற்கப்படுகிறது. இந்த கலப்பட தேயிலைத்தூள் மூலம் தயாரிக்கப்படும் தேநீர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. 


டீ தூளில் என்ன கலப்பட பொருட்கள் கலக்கபடுகின்றன
டீ தயாரிப்புக்கு, தேயிலையிலிருந்து பெறப்பட்ட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறது. டீ நல்ல நிறத்திலும், வாசனையுடனும் இருந்தால் மட்டுமே தரமிக்க டீத்தூள் என பலரும் நம்புகின்றனர். இதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சிலர், டீத்தூளில் நிறமிகள் மூலம் செயற்கையாக நிறம் ஏற்றுவது மற்றும் ரசாயனங்கள் மூலம் வாசனை சேர்ப்பது உள்ளிட்ட மோசடிகளை செய்கின்றனர். இவ்வாறு செயற்கையாக நிறமி, வாசனை சேர்ப்பதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. டீக்கடைகள் அனைத்தும் தரமிக்க டீத்தூள் மற்றும் உணவுப்பொருட்கள் கொண்டு விற்பனை செய்யப்பட வேண்டும்.

கலப்பட டீ துாள் கண்டறிவது எப்படி?
பாலில் கலக்கும்போது, நிறம் அதிகமாக கிடைக்க, டீ துாளில் ரசாயன நிறமிகள் அதிகம் கலக்கப்படுகின்றன. சாதாரண தண்ணீரில், டீ துாளை சிறிதளவு போடும்போது, நிறமிகள் தனியாக பிரிந்து, கலப்பட டீ துாள் தனியாக தெரியும். நிறமிகள் தண்ணீரின் விளிம்பில் வளையம் ஏற்படுத்தும். தரமான டீ துாள் மெதுவாக, தண்ணீரில் கீழிறங்கும். மரத்துாள் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், தண்ணீரில் தனியாக மிதக்கும்.

பாதிப்புகள் என்ன 

1) சிறுகுடல் புற்றுநோய் வரகூடும்

2) ( Fatty liver )கல்லீரல் பிரச்சனை வரும்

3) கிட்டினி செயல் இழப்பு ஏற்படும்

4) ( Lungs problem )நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.

5) Gastric ulcer மற்றும் இரைப்பை கோளாறு போன்றவை முதல் அறிகுறி

6) ) ( Digestive problem (செரிமான பிரச்சனை மற்றும் பசியின்மை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.


 
7) அதிபடியான ( hydrochloric Acid ) அமிலத்தை சுரக்க செய்து வயிற்று புன் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

8) மூட்டுவலி பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.

9) இறுதியாக  படிப்படியாக மனிதனை கொள்ள கூடிய விஷமாக இந்த டீ மாறுகிறது.