நீங்க ஸ்வீட் பிரியரா ?உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி -பதறாம படிங்க

 
sweet

இன்று நம் முன்னோர்கள் சாப்பிட்ட நோய் உண்டாக்காத இனிப்பு வகைகளை காணாமல் போக செய்து விட்டு ,வங்காள வந்தேறி இனிப்புகளும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பஞ்சாப் வழி படையெடுத்து வந்த அல்வாவுமே முக்கிய இனிப்பு வகைகளாக, எண்ணெய் டால்டா போன்றவற்றில் ஊறி மிதப்பவைகளாக உள்ளன.நம் பாரம்பரிய இனிப்புகளான கொழுக்கட்டை போன்றவை மறைந்து வருகிறது .இதனால் பல நோய்கள் புற்றிசல் போல நம்மை ஆட்படுத்துகிறது 

அதிகமாக அந்த வங்காள இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் பல வித நோய்களை தருகிறது. அதில் முக்கியமான ஒன்று உடல் எடையை அதிகரித்தல் ஆகும். இனிப்பு சாப்பிட்டால் இடுப்பு, கை,தொடை போன்ற இடத்தில் தேவையில்லாத கொழுப்புகள் உருவாகும். தினமும் உடலுக்கு 300 மில்லி கொழுப்புகள் போதுமானது. இதை தாண்டி செல்லும் பொழுது அவை தேவை இல்லாத கொழுப்பாக மாறிவிடுவதால் உடல் எடை கிடு கிடுவென உயருகிறது. அந்த வட இந்திய இனிப்பு சாப்பிடுவதால் பற்களில் கண்ணுக்கு தெரியாத புழுக்களை உருவாக்கி பற்களை பாதிக்கிறது. அதுவும் சிலர் இரவில் இனிப்பை சாப்பிட்டுவிட்டு பற்களை சுத்தம் செய்யாமல் உறங்கி விடுவார்கள். இதனால் பற்கள் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு கெட்டு விடுகிறது 
இந்த  கண்ணைக் கவரும் வண்ணங்களில் மினுமினுப்பு காட்டும் இனிப்புகளால் தான் இன்று பிறக்கும் போதே சர்க்கரை நோயுடன் பல குழந்தைகள் பிறந்து வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரையுடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்