அடிக்கடி ரெடி மேட் உணவுகளை சாப்பிடுறவங்களின் எந்த பார்ட் பொடி பொடியாகும் தெரியுமா?

 
burger

உடல் உறுப்புகளில் மிக முக்கிய உறுப்பாக கல்லீரல் உள்ளது. மென்மையான உறுப்பான கல்லீரல் சுமார் 1 கிலோ எடை கொண்டது.

கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான். பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும்.

கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உயிரை பாதுகாக்கும் முக்கிய உறுப்பான கல்லீரலை கடுமையாக பதம் பார்ப்பது நொறுக்குத் தீனிகள்தான்.

குறிப்பாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப்பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறிவைத்து தாக்குகிறது.

நம்மில் பெரும்பாலோர் பசியுடன் இருக்கும் போது, குப்பை உணவுகளான ஜங்க் புட்டை சாப்பிட ஆசைப்படுகிறோம். இதனைத் தவிர்க்க, ஆரோக்கியமான சிற்றுண்டியை நாள் முழுவதும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு வேளை உணவுக்கு இடையில் ஒரு கைப்பிடியளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். மேலும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஆரோக்கியமான ஸ்மூத்தீஸ்களை அருந்துங்கள்.

​நிறைய தண்ணீர் குடிக்கவும்


நம் உடல் அடிக்கடி தாகத்தை, நம் பசியுடன் போட்டு குழப்புகிறது. உங்களுக்கு திடீரென பசி ஏற்பட்டால், ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரைக் குடித்து விட்டு, சிறிது நேரம் காத்திருங்கள். நேரம் கடந்தால் உங்களின் பசி ஏக்கம் மறைந்து போவதை நீங்கள் கவனிக்கலாம். உணவுக்கு இடையில் தண்ணீர் குடிப்பது பசியைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி, உடல் எடை இழப்புக்கும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது உதவும்.

நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சியவற்றை சிறுநீரகம் சுத்திகரிக்கிறது. நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும்.

தற்போது கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, புரோட்டா போன்றவை விற்கப்படுகின்றன. சப்பாத்தி கெடாமல் இருக்க ஒருவகை ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற அரை வேக்காட்டு ரெடிமேடு சப்பாத்திகளை வாங்கி நாம் சாப்பிட்டால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்.

இதய கோளாறு: துரித உணவுகளில் டிரான்ஸ் மற்றும் பூரித கொழுப்பு அதிகம். நெடுநாள் இவற்றை உண்டு வந்தால் இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் என்னும் கொழுப்பு படிந்து இதய நோயை உருவாக்கும். வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் துரித உணவுகளை சாப்பிடுவோருக்கு மாரடைப்பு வரக்கூடிய வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம்.

உடல் பருமன்: பதின்பருவத்தினராகிய இளம் தலைமுறையினர் சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை. கலோரி, சர்க்கரை ஆகியவை நிறைந்துள்ள துரித உணவுகளை உண்பதால் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். தேவைக்கு அதிகமாக உடல் எடை கூடி விடுவதால் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கு இலக்காகி விடுகின்றனர். இதுபோன்ற உணவுகளை உண்ணும் தலைமுறையினருக்கு காய்கறிகள், பழங்களை உண்ணும் வழக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆகவே இவர்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலில் குறைவானவர்களாகவே காணப்படுகின்றனர்.

நீரிழிவு: அதிகப்படியான கலோரி (ஆற்றல்) மற்றும் சர்க்கரை பொருள்கள் கொண்ட துரித உணவுகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு (டைப் 2) பாதிக்கிறது.