இந்த பயங்கரமான பக்க விளைவு பத்தி தெரிஞ்சா பெண்கள் ஷேவிங் செய்ய மாட்டாங்க

 
side effects of hair removal

பெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க சேவிங், வேக்சிங் அல்லது த்ரட்டிங் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் அதன் விளைவு என்னவென்று தெரிந்து கொள்வது நல்லது.

உடலில் இருக்கும் தேவையற்ற முடியை கை, கால்கள், அக்குள் பகுதி) நீக்குவதற்கு லேசர் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் பக்கவிளைவுகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். லேசர் மூலம் முடி அகற்றுதல் எளிதாக இருக்கிறது என்பவர்கள் இதன் பக்கவிளைவுகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். லேசர் பயன்படுத்தும் போது அது எரிச்சலை உண்டாக்கி அந்த இடத்தில் வடுக்களை உண்டாக்கிவிடும். இது குறித்த பக்கவிளைவுகளும் குறித்து தெரிந்துகொண்டால் நீங்கள் கவனமாக பயன்படுத்துவீர்கள்.

பெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க ஷ்சேவிங், வேக்சிங் அல்லது த்ரட்டிங் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் அதன் முடிவில் விளைவு ஊசி போன்ற முடிகளின் வளர்ச்சி தான் சருமத்தில் ஏற்படுகிறது.

ஒரு சில பேர் ஷ்சேவிங் செய்வர் ஏனெனில் அவர்களுக்கு வேக்சிங் அழற்சியே காரணம். ஆனால் சிலர் சேவிங்கில் ஏற்படும் சரும வெட்டு காயங்கள் வேக்சிங்கில் இல்லை என்பதால் அதைச் செய்வர். இந்த முறைகளைச் செய்வதில் எந்த ஒரு விஷயமும் இல்லை. ஆனால் இதை தொடர்ந்து எத்தனை முறை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது தான் முக்கியம்.

அதே நேரத்தில் தொடர்ந்து ஹேர் ரீமுவல் செய்வதால் சருமம் பாதிக்கப்படும், அப்படியே விட்டுவிட்டு எப்போதாவது எடுத்தால் முடி வளர்ந்து அதுவே உங்களுக்கு தலைவலியாகிவிடும்.

முக்கியமான நிகழ்ச்சி மற்றும் மீட்டிங் போது விரைவில் ஹேர் ரீமுவல் செய்து கொள்ளுங்கள். சிலர் ஹேர் ரீமுவல் செய்யாமல் மூடிய ஆடைகளை போட்டு சமாளிப்பர். ஹேர் ரீமுவல் செயல் செய்தால் உங்கள் உடல் புத்துணர்ச்சியை உணரும். எனவே உங்க ட்ரெஸ் என்னவாக வேணா இருக்கட்டும் கண்டிப்பாக குறுகிய காலத்தில் ஹேர் ரீமுவல் செய்து கொண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகளுக்கு செல்லுங்கள்.

அவசர நிலையில் உடல் முடி வளர்ச்சியை உங்களால் கணிக்க முடியாது. இது உங்கள் ஹார்மோன் மாற்றம் அல்லது உடற்பயிற்சியின் அளவு போன்றவற்றால் கூட நீங்கள் எதிர்பார்க்காத முடி வளர்ச்சி ஏற்படலாம். அந்த சமயத்தில் சரியான திட்டமிடுதலோடு ஹேர் ரீமுவல் செய்து கொள்ளுங்கள். சலூன் செல்ல நேரம் இல்லாத சமயத்தில் வீட்டிலேயே ஷ்சேவிங் செய்து கொள்ளுங்கள். எல்லா பெண்களும் ஒரு மாதம் முன்னாடி திட்டமிட்டு ஹேர் ரீமுவல் செய்யாமல் நினைத்த நேரத்தில் எந்த வித திட்டமும் இல்லாமல் உடனே செய்கின்றனர். இது முற்றிலும் தவறானது.

எப்பொழுது உங்கள் முடியை நீக்க ஹேர் ரீமுவல் தேவை என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும். இதை உங்கள் அழகு பராமரிப்பு திட்டத்துடன் சேர்த்து வகுத்துக் கொள்ளுங்கள். ஹேர் ரீமுவல் ட்ரீட்மெண்ட்டை ஒரு மாதமோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ செய்வது உங்கள் சருமத்தின் தன்மை மற்றும் முடியின் வளர்ச்சியை பொருத்தது.

லேசர் மூலம் முடிகளை அகற்றினால் நீங்கள் சில பக்கவிளைவுகளை எதிர்கொள்ளலாம். இவை எல்லாமே தற்காலிகமானவை. எனினும் சருமம் மோசமடைவதால் சரும மருத்துவரை அணுக வேண்டும்.

தோல் சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை லேசர் மூலம் முடி அகற்றுதலின் பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். உடலின் முக்கியமான பகுதியிலிருந்து முடிகளை அகற்றினால் அதிகமாக இருக்கும். சருமம் மென்மையாக இருப்பதால் சிவத்தல் எரிச்சல் மற்றும் வீக்கத்தையும் உணரலாம். இந்த எரிச்சல் தற்காலிகமானது. இதற்கு ஐஸ்கட்டி ஒத்தடம் சரியாக இருக்கும்.

லேசர் செயல்முறைக்கு பிறகு உங்கள் சருமம் நிறமாற்றங்கள் உண்டாகிறதா என்பதையும் கவனிக்கலாம். ஏனெனில் லேசர் பக்கவிளைவுகளில் இந்த சரும நிறமாற்றமும் ஒன்று.

குறிப்பாக மென்மையான சருமத்தை கொண்டிருப்பவர்களுக்கு கருமையான புள்ளிகள் பார்க்கலாம். இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை என்றாலும் கடுமையான நிறமாற்றம் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.

லேசர் செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சருமம் பாதிக்கப்பட்ட பகுதியில் தோல் உரிதல் உண்டாக்கும். இது அரிதானது என்றாலும் இந்த பிரச்சனை வடுக்களை உண்டாக்கலாம். இந்த இடத்தில் மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இந்த பக்கவிளைவுகள் பொதுவானவை என்றாலும் அரிதான நேரங்களில் இவை கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்.