தயிருடன் மீன் மற்றும் இறைச்சி சாப்பிட்டால் உங்க வயிறு என்னாகும் தெரியுமா ?

 
fish

பொதுவாக தயிர் சேர்க்காமல் சாப்பிட்டாலே அந்த மதிய உணவு முழுமை பெறாது எனலாம் .எனவே தயிரை அவசியம் சேர்த்து கொண்டு சாப்பிடலாம் .ஆனால் எந்த உணவுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பாதிப்பு உண்டாகும் என்று பார்க்கலாம்
1.சிலர் மாம்பழம் போன்ற பழங்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவர் ,ஆனால் இதை  தயிருடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது.
2.அதற்கு காரணம் மாம்பழத்தில் சூடு அதிகம் மற்றும் தயிர்  குளிர்ச்சியான பொருள். எனவே இந்த கலவையை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
3. மேலும் சிலர் தயிரில் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவர் .

curd
4.ஆனால்  தயிர் குளிர்ச்சியானது, வெங்காயமும் குளிர்ச்சியானது தான். ஆனால் வெங்காயம் நம் உடலுக்கு சென்றவுடன் சூட்டை கிளப்பிவிடும்.
5.இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது வயிற்று பிரச்னைகள், தோல் ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் தோன்றும்.
6.எனவே தயிருடன் வெங்காயம் சேர்ப்பதை எப்போதும் தவிர்ப்பது நல்லது.பிரியாணி போன்ற உணவிற்கு சைடு டிஷ்ஷாக இந்த தயிரில் வெங்காயம் சாப்பிடுவது கூடாது
7.தயிர் விலங்குகளின் பாலில் இருந்து பெறப்படுவதால், மீன் மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளுடன் அதை சேர்த்து கொள்ள கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது .