எந்த நோய் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் தெரியுமா ?
பொதுவாக காபி குடிப்பது சிலருக்கு நன்மை செய்தாலும் ,பலருக்கு பல உடல் உபாதைகளை கொடுக்கிறது .இது தரும் தீமைகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1.அசிடிட்டி பிரச்சினையுள்ளவர்கள் காபி குடித்தால் உடலில் அமிலத்தன்மை அதிகரித்து வயிறு பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது .
2.மேலும் சிலருக்கு காபி குடித்தால் மூளையில் கார்டிசோல் என்ற ஒரு ரசாயனம் சுரந்து அது அதிக மன அழுத்ததையுண்டு பண்ணும் .
3.மேலும் சிலருக்கு ஒரு விதமான படபடப்பு ,ஸ்ட்ரெஸ் போன்றவை தோன்றலாம் .
4.சிலர் ஒரு நாளைக்கு நாலு கப், ஐந்து கப் காபிகள் கூட குடிப்பது உண்டு. இத்தகையவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருந்து இதை தவிர்க்க வேண்டும் .
5.இது முதலில் நம்முடைய மைய நரம்பு மண்டலத்தை தூண்டி, மூளையில் இருக்கும் நரம்புகளை பாதிக்க செய்து உடலில் ஒரு விதமான படபடப்பை உண்டு செய்யும்
6.இதனால் ரத்த அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
7.இது மேலும் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்