வெங்காயச் சாற்றை வாரம் இரண்டு முறை தலையில் தடவினால் என்னாகும் தெரியுமா ?
பொதுவாக முடி உதிரல் பிரச்சினைக்கு வெங்காயம் சிறந்த தீர்வாக உள்ளது ,நம் தமிழர் வாழ்வில் வெங்காயம் தவிர்க்க முடியாத ஒரு பொருள் ,சமையலில் இதன் பங்கு மகத்தானது ,அதுபோல் முடி வளர்ச்சிக்கும் இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த முடி வளர்ச்சிக்கு எப்படி வெங்காயம் பயன் படுகிறது என்று இப்பதிவில் காணலாம்
1.இந்த வெங்காய சாறை தலையில் தடவி 20நிமிடம் ஊறவைத்து தலைக்கு குளித்தால் நலம் சேர்க்கும் 2..ஜலதோஷம் ,சைனஸ் தொல்லை உள்ளோர் முதலில் 15 நிமிடம் தலையில் இந்த வெங்காய சாறை தடவி ஊறவைத்து குளிக்கலாம் .
3.முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு வெங்காயச் சாறு பெரிதும் பங்காற்றுகிறது.
4.வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்கிறது .மேலும் வெங்காயம் முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
5. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.
6.வெங்காயச் சாற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை தலையில் தடவிவரலாம் ,இதனால் பொடுகு, பேன், ஈறு ஆகியவற்றை நீக்கி, அழுக்குப் படியாமல் காப்பாற்றும்
.