இந்த இடத்துல இரண்டு சொட்டு எண்ணெய் விட்டால் ,எந்த நோயெல்லாம் விட்டு போகும் தெரியுமா

 
oli

நம் உடலின் மையப்பகுதி தொப்புள் தான். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இந்த தொப்புளில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்வதால் என்னென்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை பிரச்சனைகள் குணமாகுமா? என்ற ஆச்சர்யம் நம்மில் பல பேருக்கு இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதுதான் இந்த வைத்தியம். உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இந்த வைத்தியத்தை எந்த எண்ணெயில் செய்வது? எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். -
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வகையான பிரச்சனைக்கும், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக, தொப்புளில், அந்த குறிப்பிட்ட எண்ணையை 1/2 ஸ்பூன் அளவு விட்டு, வலப்புறமாகவும் இடப் புறமாகவும், வட்டவடிவில் லேசான முறையில் மசாஜ் செய்து வரவும். 
நல்லெண்ணெய்: உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும் குறைந்துவிடும். 
கடுகு எண்ணெய்: கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

nallennai

 

வேப்ப எண்ணெய், தேயிலை மர எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தொப்புளில்  மசாஜ் செய்து வந்தால் உடலின் சூடு தணிவதோடு உடலில் உள்ள நச்சுக்களை எல்லாம் வெளியேறும். கதிரியக்க சேதங்கள் ஏதும் இல்லாமல் சருமமம் பொலிவு பெறும்.

குறிப்பாக பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் தொப்புளைச் சுற்றி தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு மெதுவாக மசாஜ் செய்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். அது மட்டுமில்லாமல் இந்த சமயத்தில் உடலில் ஏற்படும் பல்வேறு சொல்லமுடியா பிரச்சினைகளுக்கும் தீர்வுக் கிடைக்கும்.

இந்த எண்ணெய் வைத்தியத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி சருமம் பொலிவுடன் காணப்படும். இரவு தூங்க செல்வதற்கு முன் இப்படி செய்வதால் உங்களுக்கு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

இந்த பாரம்பரிய மசாஜ் முறையினால் கண் பார்வை மேம்படுவதாகவும், நாள் முழுக்க அதிகம் வெளிச்சம் உள்ள திரைகளையே பார்ப்பவர்களுக்கு கண் ஆரோக்கியம் மேம்படுவதாகவும், கண் வலி, கண் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமடைவதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் தொப்புளில் எண்ணெய் வைக்கும் கையேடு உச்சந்தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு படுத்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறதுநல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு மசாஜ் செய்யும் போது உடலின் மூட்டுப்பகுதிகளில் ஏற்படும் வலி குறையும் என்றும் கூறப்படுகிறது.