வேப்பிலையுடன் எலுமிச்சை தேச்சி குளிச்சா ,எந்த பிரச்சினை காணாம போகும் தெரியுமா ?

 
lemon

தலையில் பொடுகு பிரச்சினையால் இன்று பலர் அவதிப்படுகின்றனர் .ஒருவித சத்து குறைவால் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு வேப்பிலை வைத்தியம் செய்து எப்படி சரி செய்யலாம் என்று படியுங்கள் 

neem
வேப்ப மரத்திலிருந்து வேப்பிலை பறித்து வைத்துக்கொண்டு ,அதை நன்றாக அரைத்து கொள்ளுங்கள் பின்னர் அந்த  வேப்பிலை பொடியில் எலுமிச்சை பழத்தை  பிழிந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த வேப்பிலை கலவையை பொடுகுள்ள  தலையின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடங்கள் காய விட்ட  பின் தலைக்குக் குளித்துவந்தால் பொடுகு பிரச்சினை மாயமாய் மறைந்து விடும் 
 
அடுத்து இன்னொரு வேப்பிலை வைத்தியம் :வேப்பிலை பொடியுடன் செம்பருத்தி பொடியை மிக்ஸ் செய்து ,அதனுடன் தயிர் சேர்த்து .பொடுகுள்ள தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் பொடுகு ஓடியே விடும் 

அடுத்த முறை :வேப்பிலையை ஒரு தண்ணீர் பானையில் போட்டு கொதிக்க விட்டு ,அந்த தண்ணீரில் குளித்து வாருங்கள் 
பின்னர் நன்றாக தலையை வேப்பம் இலை அவித்த நீரில் கழுவி விட்டு துண்டு ஒன்றினால் தலையை கட்டிக் கொள்ளுங்கள். 1 மணி நேரத்தின் பின் துண்டை கழட்டி விடலாம். மறுநாள் வரை தலை குளிக்காமல் இருந்தால் பொடுகு ,பேன் அனைத்தும் பறந்து போய் விடும்