கழுத்து வலியை கால் மணி நேரத்தில் கழுத்துலே அடிச்சி துரத்தலாம் வாங்க

 
back pain tips

அதிமுகமாக கம்ப்யூட்டரில் வேலை செய்வோருக்கு கழுத்து வலி தவிர்க்க முடியாதது ஆகும் .இந்த கழூத்து வலியுள்ளவர்கள் என்னதான் மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் சில பயிற்சிகளை எடுத்து கொண்டால் இந்த வலியை இல்லாமல் செய்யலாம்

பயிற்சி -1

தீராத கழுத்து வலியுள்ளவர்கள் முதுகை வளைக்காமல் நேராக நின்று கொண்டு, கழுத்தை ஒரு முறை இடது பக்கமாகவும் பின்னர் வலது பக்கமாகவும் மாறி மாறி அசைக்க வேண்டும். இதை 5-8 முறை செய்யவும், ஒரு நாளைக்கு காலை மாலை இரு நேரமும் இதனை செய்தால் கழுத்து வலி கூடிய விரைவில் காணாமல் போகும் .

neck

 பயிற்சி-2

நமது மூளையின் நரம்புகள் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், தீராத கழுத்து வலியுள்ளவர்கள் கழுத்துவலி ஏற்படும் போதெல்லாம், நேராக நின்று கொன்று, உங்கள் தோள்களின் மேல் பகுதியை வட்ட இயக்கத்தில் சுழற்றவும். இதை 5 முறை எதிர்நோக்கியும், 5 முறை மேலே பார்த்தும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால் கழுத்து வலி சரியாகும்

 பயிற்சி-3

தீராத கழுத்து வலியுள்ளவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய, நாற்காலியில் நேராக உட்கார்ந்து, உங்கள் கைகளை இரு முழங்கால்களிலும் வைத்து வலது மற்றும் இடது பக்கம் அசைக்கவும். இதனால், நரம்புகளுக்கு பயிற்சி கிடைத்து,கழுத்து  வலியிலிருந்து நிவாரணம் கிடைத்து அந்த வலி பஞ்சாய் பறந்து போகும் .

கழுத்து பயிற்சி-4

தீராத கழுத்து வலியுள்ளவர்கள் இந்த பயிற்சியை தினமும் காலையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கழுத்து வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், கழுத்துவலி உள்ளவர்களுக்கு இது ஒரு சஞ்சீவி பயிற்சி. இதற்கு இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து மெதுவாக கும்பிட வேண்டும். முதலில் வலது பக்கம் சாய்ந்து பின் இடது பக்கம் சாய்க்கவும். இந்த பயிற்சியை சுமார் 10-12 முறை செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கழுத்து வலியும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்