குளிர்காலத்தில் குதறி எடுக்கும் மூட்டு வலி குறைய சில வீட்டு வைத்தியம்

 
moottu

​வானிலை மாற்றங்களால் கூட சிலருக்கு உடம்பில் வலி உண்டாகிறது. அதிலும் குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது பெரும்பாலோனோர் மூட்டு வலிகளால் அவஸ்திப்படுகிறார்கள். ஏன் குறிப்பாக குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகம் ஏற்படுகிறது என்று யோசித்து இருக்கோமா? மூட்டு வலிக்கும் குளிர்காலத்திற்கும் என்ன சம்பந்தம்?

நமது உடலில் கால்சியம் பற்றாக்குறையும் மூட்டு வலி அதிகமாக வரக் காரணமாக அமைகிறது. மேலும் குளிர்காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் மூட்டுகளைச் சுற்றியுள்ள நரம்புப் பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வீக்கங்கள் அப்படியே மூட்டு வலியை உண்டாக்கி விடுகின்றன. இதைப் பற்றி நாம் இப்பொழுது விரிவாகக் காணலாம்.


குளிர் காலத்தில் காற்றில் உள்ள அழுத்தம் குறைய ஆரம்பித்து விடுகிறது. இதனால் மூட்டுகளில் அமைந்துள்ள வாயு மற்றும் திரவ மூலக்கூறுகளை விரிவடையச் செய்கிறது. இந்த மூலக்கூறுகள் விரிவடையும் போது நரம்புகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதனால் தீராத மூட்டுவலி உண்டாகிறது. காயமடைந்த பகுதிகளில் உள்ள கிழிந்த திசுக்களும் விரிவடைந்து மூட்டு வலியை அதிகப்படுத்துகின்றன.

குளிர்காலத்தில் நாள் முழுவதும் சோம்பேறித்தனம் தோன்றும். நாமும் போர்வைக்குள் முடங்கியே கிடப்போம். ஆனால் இது உண்மையில் உடம்பிற்கு மிகவும் தீங்கானது. இப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அசையாமல் இருப்பது உடம்பிற்கு விறைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மூட்டுகள் கடினமாகவும் வேதனையாகவும் மாறுகிறது.

1. உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்:

உங்கள் உப்பு உட்கொள்ளல் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது உடலில் கால்சியம் இழப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது. உப்பானது திசு வீக்கத்தைத் தூண்டும் திரவத்தைத் தக்கவைத்து, அதனால் மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.

2. சர்க்கரை உணவுகளை கட்டுப்படுத்துங்கள்:

மூட்டு வலி மற்றும் விறைப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள், பேக்கரி பொருட்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பிற உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பது முடக்கு வாதத்தின் நிலையை மோசமாக்கும். மேலும் திசு வீக்கம் மற்றும் மூட்டு வலியைத் தூண்டும்.

3. சிவப்பு இறைச்சி நுகர்வு குறைக்கவும்:

ஆட்டிறைச்சி, பன்றி போன்ற சிவப்பு இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரண்டும் உடலில் ஏற்படும் வீக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை. மேலும் மூட்டு விறைப்பு, வலியை தூண்டும் மற்றும் முடக்கு வாதத்தின் அறிகுறிகளை மோசமாக்கும்.

 

4. பசையம்:

பசையம் என்பது கோதுமை, கம்பு, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் புரதமாகும். பசையம் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் உள்ளனர். பசையம் தங்கள் உடலில் வீக்கத்தைத் தூண்டுகிறது என்பது பலருக்குத் தெரியாது. அத்தகையவர்கள் மூட்டு வலியைக் கட்டுக்குள் வைத்திருக்க பசையம் உணவைத் தவிர்க்க வேண்டும்..

முடவாட்டுக்கால் கிழங்கு என்பது ஒரு தாவர வகையைச் சார்ந்தது. பெரும்பாலும் மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. மலைக்காடுகளில் உள்ள பாறைகளிலும் மேட்டுப்பாங்களான பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதற்கு வேர்கள் கிடையாது. இதற்கு வேர் என்பதே இதன் கிழங்கு தான். இது வளரக்கூடிய பாறை பகுதிகளில் இருக்கக்கூடிய தங்கம், செம்பு, இரும்பு, கால்சியம் மற்றும் சிலிக்கா போன்றவற்றின் சத்துக்களை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் போன்ற பிரச்சினைகளையெல்லாம் குணப்படுத்த சித்தர்கள் இதை ஒரு மண்டலம் சாப்பிட பரிந்துரைப்பதாகவும் சொல்வதுண்டு.

.

இதற்கு முதலில் முடவாட்டுக்கால் ஒரு 250 கிராம், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மிளகு, கசகசா, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி, இலவங்கப்பட்டை, பூண்டு, நல்லெண்ணெய், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

வைட்டமின் டி அளவு குறைதல்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் முடவாட்டுக்கால் உடன் இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்த மசாலாவைச் சேர்க்கவும், ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு இறக்கி விடவும். இறக்கியதும் உப்பு மற்றும் மிளகு போட்டு சூப் ஆக குடிக்கலாம்.

இதை தொடர்ந்து இரண்டு வாரங்கள் குடித்து வந்தால் மூட்டுவலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசைபிடிப்புக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதோடு கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமாகும்.

 

நாள்பட்ட மூட்டு வலி, இளம் வயதினருக்கு ஏற்படும் மூட்டு வலி, உடல் வலி, அசதி, களைப்பு போன்ற உங்கள் எல்லா கவலைகளையும் தீர்க்க இயற்கை அருளிய வரம் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு. இதை நீங்களும் பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.