குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு எந்த பால் கொடுக்கனும் தெரியுமா ?

 
baby leg

பொதுவாக  தாய்ப்பாலில் உள்ள ஊட்ட சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து ,அந்த குழந்தைக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.இதன் ஆரோக்கிய நன்மை குறித்து நாம் காணலாம்
1. தாய் ஒரு குழந்தைக்கு பால் கொடுக்கும்போது சில நேரம் குடிக்காது .இதனால் குழந்தையின் எடை குறையும் .
2.அதனால் பால் குடித்த பிறகு அந்த குழந்தை எதற்கு அழுகின்றது என்பதை கண்டறிந்து மீண்டும் பால் கொடுக்க வேண்டும்  
3.பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை வழங்கிய மிகச் சிறந்த ஊட்ட பானம் தாய்ப்பால்தான். அதில் பல நன்மைகள் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் கூட நல்லது உள்ளது.

baby
4.குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதால் அவர்களின் வளர்ச்சி, அறிவுத்திறன், வலிமை, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மேம்பட்டு விடும் .

5.குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டமும் சத்துக்களும்  அதில் இடம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டுகள், லிபிடுகள், புரதம், வைட்டமின், தாதுக்கள், தண்ணீர் என அனைத்துமே அதில் உள்ளன.

6.குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பித்த பிறகு பால் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். அதன் பின்னர் மெதுவாக பசும்பாலைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.