ஓவரா அசைவம் சாப்பிடுறவங்களின் லிவர் பவராயிருக்க சில டிப்ஸ்

 
stomach

சிறு வயதில், நமக்கு நன்மைத் தரும் உணவுகள் எது தீமை தரும் உணவுகள் எது என்பது நமக்கு தெரியாது. நமக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி சுவைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்போம்.

நாட்டு கோழி, ஆட்டுக்கறி, பிராய்லர் கோழி, நண்டு, இறால், மீன் போன்றவைத்தவிர நத்தை, வான் கோழி, புறா, முயல், மாடு போன்றவற்றையும் விட்டுவைப்பதில்லை. இவையெல்லாம் ஒரு காலத் தில் நமது முன்னோர்கள் சாப்பிட்டாலும் உடலளவில் பெரிய மாற்றங்களை அவர்கள் சந்திக்க வில்லை. காரணம் அவர்கள் உணவை மருந்தாக எடுத்துகொண்டால் ஒவ்வொரு பொருளை சமைக்கும் போதும் அதற்கு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருளையும் பயன்படுத்தி வந்தார்கள். அதனால் அசைவ உணவுகள் அவர்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்ததில்லை.

​மாறிய உணவு பழக்கம் அசைவத்திலும்


உணவு பழக்கங்களில் பலவிதமான மாற்றங்களை பழகிவிட்டோம். அசைவம் வீட்டில் மட்டுமே என்ற காலம் இப்போது இல்லை. இன்று வீதிக்கு வீதி சைவ உணவகங்களைக் காட்டிலும் அசைவ உணவகங்கள் நிறைந்திருக்கின்றன. தள்ளுவண்டி கடைகளும் அசைவ உணவுகளை குறிவைத்து நடத்தப்படுகிறது.

இவர்களது நோக்கம் அசைவ பிரியர்களை கவர்வதற்காக என்பதால் அசைவ வகைகளும் விதவித மாக கண்ணை கவரும் கலரை நிரப்பு அதிகப்படியான எண்ணெயில் மிதக்கவிட்டும், பொறிக்க விட்டும் தயாரிக்கப்படுகின்றன. நாக்கில் எச்சில் ஊறவைக்கும் வகையில் இன்று மட்டன், சிக்கன் இரண்டு வகை உணவுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் செய்யப்படுகிறது. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் இந்த ருசியில் தான் வளர்கிறார்கள்.

சற்று கூர்ந்து பார்த்தால் இதில் சுவைக்கு சேர்க்கப்படும் கலவையும். மிதமிஞ்சிய எண்ணெயும் கலர் சேர்க்கையும் உடலுக்கு தீங்கை மட்டும் இழைப்பதை உணரலாம். அது மட்டுமல்லாமல் விதவிதமான அசைவ உணவுகள் இன்று வீட்ட்டில் தயாரிப்பதை விட வெளியில் தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதனால் சுகாதாராமும் கேள்விக்குறியாகிறது.
 

இறைச்சியை விரும்பும் பலருக்கும் இவைதான் முதன்மையான பிரதான உணவாக இருக்கிறது. இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் உரிய பருவத்தில் வளர்ச்சியடைவய செய்யாமல் ஹார்மோன் ஊசிகள் செலுத்தி விரைவில் இறைச்சியாக்கப்படுகிறது.

பெண்குழந்தைகள் நாக்குக்கு சுவைகூட்டும் மென்மையான இறைச்சி என்று சிக்கன் வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் விலையும் குறைவு என்பதால் அடிக்கடி பிராயலர் கோழி வீட்டில் கொதிக்கிறது. இதை சாப்பிடும் குழந்தைகள் 10 வயது நிறைவதற்குள் பூப்படைந்துவிடுகிறார்கள்.

முக்கியமாக அதிக கொழுப்புகளை கொண்ட அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உயர் கொலஸ்ட்ரால், இதய நோய், கல்லீரல் பாதிப்புகள் உண்டாகிறது

குடல் கசிவு சிக்கல்கள்

 

எண்ணெய் அதிகம் உள்ள மற்றும் கனமான உணவுகளை எடுத்துக் கொண்ட பின்னர் சில விடயங்களை செய்ய வேண்டும்.

அசைவ உணவுகளை சாப்பிட்ட பின்னர் மிகக் கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதிக கலோரிகளை எரிக்க நடைபயிற்சி பயன்படுகிறது.

ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை பருகுவதால் எண்ணெய் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இதனால் உங்கள் கல்லீரல், வயிறு, மற்றும் குடல் பகுதி சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக மாறுகிறது.

எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின் குளிர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின், குளிர்ந்த உணவுப் பொருட்களாகிய ஐஸ் க்ரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் கல்லீரல், வயிறு, குடல் போன்றவற்றில் எதிர்மறை விளைவுகள் உண்டாகின்றன.

எண்ணெய் உணவுகளின் எதிர்மறை விளைவுகளைப் போக்க சில ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன.

ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை வெதுவெதுப்பான நீரில், அல்லது கோமியத்தில் அல்லது தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகுவதால் எண்ணெய் உணவுகள் ஜீரணிக்க பெரும் உதவியாக இருக்கும்.

குக்குலு கொழுப்பு அளவைக் குறைக்கவும் மற்றும் உயர் கொழுப்பு உணவால் ஏற்படும் கெட்ட விளைவுகளைக் குறைக்கவும் உதவும் ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகை, மாத்திரையின் வடிவில் சந்தையில் விற்பனை செய்யபடுகின்றன. ஆனால் இதனை வாங்கி உட்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

ஆயுர்வேதத்தின்படி , எண்ணெய் உணவிற்கு தேன் ஒரு சிறந்த மாற்று மருந்தாகும். அசைவ உணவு சாப்பிட்ட பிறகு, கட்டாயமாக சிறிது தேன் சாப்பிடுவது நல்லது.