கல்லீரல் நூறு வருஷம் ஆரோக்கியமாயிருக்க உதவும் 'லிவர் டிடாக்ஸ்' பத்தி தெரியுமா ?

 
Liver

நமது உடலில் உள்ள கல்லீரலின் முக்கியமான பணி ,உடலில் இருந்து கெட்ட  ரசாயன கழிவுகளை வெளியேற்றுவதும் , பல தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களைச் சேமித்து வைத்து உடலை நோயின்றி பாதுகாப்பதும்தான் 

கல்லீரலுக்கு  'லிவர் டிடாக்ஸ்' செய்வது இப்போதெல்லாம் மிகவும் முக்கியமானது. எனவே, கல்லீரலின் கழிவு நீக்க செய்யப்படும் லிவர் டிடாக்ஸ்  பற்றி அவசியம் தெரிந்து கொண்டு உங்கள் லிவரை பாதுகாத்து கொள்ளுங்கள் 

liver

கல்லீரலை நச்சுக்களை நீக்கும் வீட்டு வைத்தியம்

1.மஞ்சள் நீர் மகத்துவம் 


 உடலின் முக்கிய பாகமான கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களும் சரி நார்மலாக இருப்போரும் சரி .எதிர்காலத்தில் லிவர் ப்ராப்லம் வராமலிருக்க  தினமும் மஞ்சள் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது. மஞ்சள் நீர்  உணவுடன் வயிற்றுக்குள் சென்ற நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது 

2.எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீர்

லிவர் ஆரோக்கியம் காக்க நினைப்போர் தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை கலந்த  வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றிட மிகவும் உதவிகரமாக இருக்கும்  . அது மட்டுமல்லாமல் இந்த எலுமிச்சை நீர் கல்லீரலின் நச்சுக்களை அடித்து விரட்டி ,லிவரினை  பவர் புல்லாக  வைத்திருக்க உதவியாக இருக்கும்

3.கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

பாஸ்ட் புட் உணவுகளான  பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற உணவுகளுக்கு டாடா பை சொன்னால் கல்லீரலை காக்கலாம் .மேலும்  மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருந்தாலும் லிவரை நூறாண்டு காலம் காத்திடலாம் என்று சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்