மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இந்த இலை
பொதுவாக நொச்சி இலை கபம் ,பித்தம் வாயு போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு தரும் .மேலும் இந்த இலையின் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த நொச்சி இலையை ஒரு தலையணைக்குள் போட்டு வைத்து கொண்டு அடிக்கடி முகர்ந்து வந்தால் ஜலதோஷம் குறையும் ,
2.மேலும் இதை சாறெடுத்து தலை ,கழுத்து ,நெற்றி போன்ற இடங்களில் தடவி வந்தால் சைனஸ் வலி குறையும் .
3.மேலும் சுக்கு துண்டுகூட சேத்து நொச்சி இலைய அரைச்சு நெற்றிப்பொட்டுல பூசினா, தலைவவலி தீரும். 4.அதுமட்டுமில்ல, நொச்சி இலைய சுடுதண்ணியில போட்டு ஆவிபிடிக்க காய்ச்சல், தலைபாரம், கபக்கட்டு... இதல்லாம் காணாமல் போகும் .
5.நொச்சி இலைகளை காய வைத்து , அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து ,ஆவியை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சுவாச பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம், நீர் கோர்வை ஆகியவை நம்மை விட்டு ஓடி விடும்
6.நொச்சி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய சாற்றை மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தடவி வந்தால் விரைவாகவே அதிலிருந்து நிவாரணம் காண முடியும்.