வசவசன்னு நிறைய குழந்தை பெத்துக்க நினைக்கிறவங்க கசகசாவை இப்படி சாப்பிடுங்க

 
baby leg

 கிட்சன்களில் எந்த மசாலா டப்பாவைத் திறந்தாலும் அதில் மருத்துவ குணங்கள்தான் நிறைந்திருக்கும். அந்த வகையில் பெண்கள் அசைவ உணவு, காரசாரமான மசாலா சேர்த்த உணவுகளுக்கு கசகாசாவையும் கட்டாயம் சேர்ப்பார்கள். ஆனால் அதுவும் சுவைக்காக அல்ல...அதிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. 

ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இதயம்தான். இது ஆரோக்கியமற்ற கொழுப்பு, எண்ணெய் போன்ற ஆபத்துகளால் பாதிப்பை உண்டாக்குகிறது. இருப்பினும் வீட்டு உணவுகளில் கசகசா சேர்ப்பதால் அதில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இரும்புச்சத்தும் அதிமமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். இதயத்திற்குத் தேவையான இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

கசகசா ‘Poppy Seeds’ என ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது. கசகசா மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது.

 இந்தியக் கிட்சன்களில் எந்த மசாலா டப்பாவைத் திறந்தாலும் அதில் மருத்துவ குணங்கள்தான் நிறைந்திருக்கும். அந்த வகையில் பெண்கள் அசைவ உணவு, காரசாரமான மசாலா சேர்த்த உணவுகளுக்கு கசகாசாவையும் கட்டாயம் சேர்ப்பார்கள். ஆனால் அதுவும் சுவைக்காக அல்ல...அதிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு நிறைய ஆரோக்கியம் உண்டு. அவை என்னென்ன பார்க்கலாம்.

 கசகசா விதைகளின் அறிவியல் பெயர் பாப்பாவர் சோம்னிஃபெரம். இது பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

 இதில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

இன்றும் பல கிராமங்களில் புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு இரவு அல்லது காலை வேளையில் கசகசா, பாதாம் சேர்த்த பால் தருவது வழக்கம். பாதாமை ஊறவைத்து தோல் உரித்து அதனுடன் கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு பாலை கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க தருவார்கள்.

இல்லற வாழ்வில் ஈடுபாடு வருவதோடு ஆண்மையை அதிகரிக்கவு பாலியல் ஆசையை தூண்டவும் கசகசாவிதைகள் பெரிதும் உதவுகின்றன.

திருமணம் முடிந்த முதல் ஒரு மாதம் வரை இந்த பாலை கொடுப்பார்கள். ஆண்மை குறைபாடு இல்லறத்தில் ஈடுபாடில்லாதவர்களுக்கு தொடர்ந்து ஒருவாரம் வரை இந்த கசகசா பாலை குடித்து வந்தால் உடனடி மாற்றம் தெரியும்.

கருப்பையில் பெலோப்பியன் குழாய்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இக்குழாய்களில் இருக்கும் கோழை அல்லது கெட்டியான அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து கருவுறுதலை அதிகரிக்க இவை உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

கசகசாவில் கரையாத நார்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எனவே இதை சாப்பிட்டால் முறையான செரிமானம் உண்டாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

நமது உடல் அதிகப்படியான வேலையை செய்வதால் ஆற்றலை இழக்கிறது. அந்த சமயத்தில் உடலுக்கு தேவையான கார்போஹைட்டு மற்றும் கால்சியத்தை கொடுக்க வல்லது.

உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டால் பொடியாக்கிய சர்க்கரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறு உருண்டையாக பிடித்து சாப்பிட்டால் வாய்ப்புண்ணிலிருந்து விடுபடலாம்.

எலும்புகளின் வலிமைக்கு தேவையான அளவு கால்சியத்தை இவை அதிக அளவில் கொண்டிருப்பதால் 40 வயதுக்கு மேல் ஏற்படும் மூட்டுவலியை வராமல் தடுக்கிறது.