மழைக்காலத்தில் சூடு பறக்க சாப்பிடுறவங்களுக்கு எந்த பார்ட் பஞ்சராகும் தெரியுமா ?

 
Foods To Avoid Before Sleeping

நம்மில் பலருக்கு, சுடச்சுட, ஆவி பறக்க சாப்பிடத்தான் விருப்பம். ஆனால், இது நல்லதா? என்பதற்கான விடையை இப்போது பார்க்கலாம்.

உணவுக் கோளாறுகள் என்பது ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஒருவரின் உடல் எடை அல்லது வடிவத்தைப் பற்றிய கடுமையான மன உளைச்சல்களால் வகைப்படுத்தப்படும் கடுமையான நிலைமைகள். இது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்பதை அறியாமலே நாம் சகஜமாக அவர்களை கிண்டலடித்தும், கேலி செய்தும் கலாய்த்து விடுகிறோம். எப்பவும் சூடான உணவு சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் இந்த கோளாறுகள் சிக்கலான மனநல நிலைமைகளாகும். இதற்கு பெரும்பாலும் உளவியல் நிபுணர்களின் உதவி தேவைப்படுகின்றன. பெரும்பாலான உணவுக் கோளாறுகள் உங்கள் எடை மற்றும் உடல் வடிவத்தில் அதிக கவனம் செலுத்துவதை உள்ளடக்குகின்றன. இதன் விளைவாக ஆபத்தான உணவு பழக்கவழக்கங்கள் உருவாகின்றன.


அனோரெக்ஸியா நெர்வோசா, புலிமியா நெர்வோசா மற்றும் அதிகப்படியான உணவுக் கோளாறு ஆகியவை உணவுக் கோளாறுகளின் மிகவும் பொதுவான வடிவங்களில் அடங்கும். டீன் ஏஜ் மற்றும் இளம் வயதை சேர்ந்தவர்களுக்கு உணவுக் கோளாறுகள் பெரும்பாலும் உருவாகின்றன. இருப்பினும் அவை மற்ற வயதிலும் உருவாகலாம். உடல் வடிவம் மற்றும் உணவைப் பற்றிக் கொண்டு ஒருவர் உணவுக் கோளாறுகளை உருவாக்க முடியும், இது கடுமையான சந்தர்ப்பங்களில் சுகாதார விளைவுகளைஉண்டாக்கும் 

நம்மில் பலருக்கு, சுடச்சுட, ஆவி பறக்க சாப்பிடத்தான் விருப்பம். ஆனால், இது நல்லதா?

கொதிக்கிற சூட்டில் உள்ளே தள்ளுகிறோமே, இதனால் ஆபத்து எதுவும் உண்டா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

உண்மையில், ஆவி பறக்கச் சாப்பிடுவது சரியல்ல, அதேபோல ஆறிப் போன உணவுப் பொருட்களை சாப்பிடுவதும் சரியல்ல. மிதமான சூட்டில் சாப்பிடுவதுதான் நல்லது.

காரணம், அதிகச் சூட்டில் உள்ள உணவுகளைச் சாப்பிட்டால், அது நமது குடலுக்கு உணவுகளை உணவுப்பாதை வழியாக எடுத்து செல்லும் மியூகோசா என்ற படலத்தை பாதிப்படையச் செய்கிறது.

இந்தப் படலம்தான், நமது உடம்பின் உணவுக்குழாயில் தொடங்கி குடல் வரை பாதுகாப்பு அரணாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் அன்றாடம் சூடாக உணவுகளைச் சாப்பிட்டு வந்தால், மியூகோசா படலத்தை பாதிப்படையச் செய்து, நாளடைவில் அல்சர் எனப்படும் குடல்புண்ணை ஏற்படுத்தலாம்.

மேலும் இந்தப் பிரச்சினையை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால், செரிமானப் பிரச்சினை, வாய்ப்புண் ஏற்படுவதுடன், அது புற்றுநோயாக மாறுவதற்குக் கூட அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே நாம் தினமும் உணவு சாப்பிடும்போது, மிதமான இளஞ்சூட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.