பணத்தை பத்திரமா பாதுகாப்பது போல் உங்க இதயத்தையும் பத்திரமா பாதுகாக்க இதை ஒதுக்குங்க

 
hert

இதயம் உடலில் உள்ள ராஜ உறுப்பாகும். ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு மற்றும் இதயகோளாறுகள் ஏற்படும்.

ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழப்புகளை சந்திக்கிறார்கள்.

இதயத்திற்கு சில உணவுகள் எதிரிகளாக இருக்கின்றது, அப்பேற்ப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலம் பெயர்க்கும்.

சொக்லேட் / மிட்டாய்கள்

நீங்கள் நினைப்பதை விட மிட்டாய்கள் இதயத்துக்கு பாதிப்பை கொடுக்கலாம் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக சர்க்கரை கொண்ட மிட்டாய்களை சாப்பிடுவது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தி அது இதயநோய்க்கு கொண்டு சென்றுவிடும்.

அடிக்கடி பசி எடுக்கும் போது வெளியே எங்கேனும் சென்றால், சீஸ் அதிகம் பயன்படுத்தும் உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் என்று தான் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள கெட்ட கொழுப்புக்கள், உடலில் சேர்ந்து இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும். இதனால் தமனிகளில் கொழுப்புக்கள் சேர்ந்து அடைப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வேறு பல இதய நோய்கள், ஏன் மாரடைப்பு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே அப்போது சூப் வகைகளில் ஏதேனும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


ஆல்கஹால்
ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினை அவ்வப்போது ஒரு டம்ளர் சாப்பிட்டால், மாரடைப்பை தடுக்கலாம் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையே அதிகமாக சாப்பிட்டால், அதற்கான எதிர்பலன் தான் கிடைக்கும். ஏனெனில் பொதுவாக மாரடைப்பிற்கு ஆல்கஹாலும் ஒரு பெரும் காரணம். அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தான், அதிக அளவில் ஆல்கஹால் அருந்துபவருக்கு விரைவில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவை மாரடைப்பிற்கும் வழிவகுக்கிறது.


சைனீஸ் உணவுகள்
சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கின்றனர். அதனால் தான் சைனீஸ் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். அதிலும் அந்த உணவுகளில் அஜினோமோட்டோ மற்றும் சோயா சாஸ் என்னும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும் சேர்க்கின்றனர். மேலும் உடலில் 1500 மில்லி கிராம் சோடியம் இருப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பானது. அத்தகைய அளவு சோயா சாஸில் இருக்கிறது. சைனீஸ் உணவுகள் அதிக சுவையுடன் இருப்பதற்கு அந்த சோயா சாஸ் தான் காரணம். ஏனெனில் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்பதோடு, இதய நோயும் ஏற்படுகிறது.

கிளிசரின் உணவுகள்
கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் வெள்ளை பிரட்களில் அளவுக்கு அதிகமான அளவில் கிளிசரின் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனை அதிகமான அளவில் சாப்பிடுவதால், இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இதனை இதய நோய் இருப்பவர்கள், முற்றிலும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குறைந்த அளவில் உட்கொண்டால் போதுமானது.

சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்

சோடா

அடிக்கடி சோடா குடிப்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். டயட் சோடா மட்டும் உடலுக்கு சிறந்தது என கருத வேண்டாம். டயட் சோடாக்கள் உங்கள் எடையை அதிகரிக்க செய்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

பீட்சா

பீட்சா இதயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய உணவு பொருளாகவே இருக்கிறது. இதில் சோடியம் அதிகமாக இருப்பதால் உடல் எடை கூடும். நீங்கள் இதை உண்ணும் போது, ​​பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு பதிலாக காய்கறிகளை சாப்பிட முயற்சிக்கவும்.

பிரஞ்ச் பிரைஸ்

பிரஞ்ச் பிரைஸ் சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும் உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அவற்றை சுடவும், வெள்ளை உருளைக்கிழங்கிற்கு பதிலாக இனிப்பு உருளைக்கிழங்கையும் பயன்படுத்தலாம்.