உங்க கிட்னியை காக்கும் பழம் எது தெரியுமா ?

 
kidney

1.ஆரஞ்சு பழத்தினை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துகிறது.

orange

2.தினமும் ஆரஞ்சு பழத்தினை ஜுஸ் போட்டுக் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

3.குறிப்பாக சிறுநீரக கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. கரையக் கூடிய நார்ச்சத்தானது ஆரஞ்சு பழத்தில் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கிறது.

4.ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய பிரச்சணைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். 5.ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாது.

6.ஆரஞ்சு பழத்தில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது.

7.ஆரஞ்சு ஜுஸை தினமும் குடிப்பதன் மூலம் மூட்டுவலி குணமாகும்.

8.தினமும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதன் மூலம் நமது சருமம் அழகாகவும், இளமையாகவும் இருக்கும்.

9.ஆரஞ்சில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது.

10.ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் உற்பத்தியைப் பராமரிக்கின்றன.