வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து குடிச்சா என்னாகும் தெரியுமா ?
பொதுவாக பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்று ஒரு பழமொழி உள்ளது .அது போல வெற்றிலையின் ஆரோக்கிய ரகசியம் இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த வெற்றிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடியது .
2.மேலும் இது நம் உடலில் சளி தொல்லையை போக்க வல்லது .அதனால் தான் சித்த வைத்திய மருந்துகளை வெற்றிலைக்குள் வைத்து சாப்பிட கொடுப்பார்கள்
.
3.மேலும் வெற்றிலை சிறந்த கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது .இது பல்வேறு நோய்களை கொல்லும் ஆற்றல் கொண்டது .
4.அது போல் திப்பிலி நம் உடலில் கோழை சேராமலும் ,தொண்டை வலி வராமலும் பாதுகாக்கும் .இது மூன்றையும் கொண்டு ஒரு கஷாயம் தயாரிக்கலாம்
5.ஆறு மிளகுகளை நன்கு இடித்து ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் இதை சேருங்கள்.
6.பின் மிளகுடன் மூன்று திப்பிலிகளை இடித்து சேருங்கள்.
7.பின்னர் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி துண்டுகளாக கிழித்து சேருங்கள்.
8.ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
9.இந்த கசாயத்தை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு குடித்து வந்தால் விரைவாகவே சுவாசக் குழாய் விரிவடைய ஆரம்பித்து விடும்.