கண் எரிச்சல் முதல் கண் வலி வரை குணமாக்கும் இந்த காய்
பொதுவாக சுரைக்காயில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த காயின் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.சுண்ணாம்பு சத்து முதல் பல்வேறு சத்துக்களை அடங்கியுள்ள இந்த காய் மூலம் நம் உடல் சூடு குறைகிறது 2.மேலும் சிறுநீரக கோளாறு ,மல சிக்கல் ,நாவறட்சி ,கண் நோய்கள் ,ரத்த அழுத்தம் ,தூக்கமின்மை பிரச்சினை ,மூல நோய்கள் ,போன்ற நோய்கள் இந்த சுரைக்காய் மூலம் குணமாகிறது ,
3.மேலும் கல்லீரலில் உள்ள விஷத்தன்மையை முறித்து அதற்கு ஆரோக்கியம் சேர்க்கிறது.
4.சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.
5.உடலில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்கம் உண்டாகிறது. இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
6.இப்போதய சூழலில் பலரும் கணினி சம்பந்தமான பணிகளில் இருப்பதால் கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
7.இவர்கள் சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்நோய்கள் நீங்கும்.