ஸ்ட்ராபெரி பழங்களை உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் ..
பொதுவாக ஸ்ட்ராபெரி பழங்களை உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1.இந்த பழம் நம் வயிறுக்கு நலம் சேர்த்து , செரிமான சக்தியை அதிகப்படுத்தி மல சிக்கலை தீர்க்கும்
2..மேலும் தலைமுடி இளவயதில் நரைப்பதை தடுத்து ,நம் முடி வளர்ச்சிக்கு உதவி புரிகிறது .
3.மேலும் நம் கண்பார்வைக்கும் இது பேருதவி புரிகிறது .
4.அடுத்து நம் இதய நலன் காப்பதில் இந்த பழம் சிறப்பாக செயல் படுகிறது ,மேலும் புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் நம்மை பாதுகாக்கும் திறன் இந்த பழத்துக்கு உண்டு.
5.நார்ச்சத்து அதிகம் உள்ள ஸ்ட்ராபெர்ரிகளை உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மை பயக்கும் .
6.ஸ்ட்ராபெரி பழங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
7.ஸ்ட்ராபெர்ரிகளை சாலட், ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி என உணவில் சேர்த்துக்கொண்டு , இதை தயிருடன் சேர்த்து பிரட்டி சாப்பிடுவதும் நல்ல சுவையாக இருக்கும் என்று இதை சாப்பிட்டவர்கள் கூறுகின்றனர்