பசியின்மை மற்றும் செரியாமை போன்ற குறைபாட்டை தீர்க்கும் இந்த பொருள்
பொதுவாக மிளகில் நிறைய நன்மைகள் உள்ளது ..இந்த மிளகின் ஆரோக்கிய பலன் உள்ளது .இந்த மிளகின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1.கருப்பு மிளகை கிரீன் டீயில் போட்டு, ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் உடல் எடை குறையும்
2.உங்களுக்கு கீல்வாதம், மூட்டுவலி அசௌகரியம் இருந்தால் மிளகை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.இது கீல்வாதத்தைத் தடுத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
3.நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் இந்த அதிசய மசாலாவை தினமும் உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.
4.மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கு.
5. பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தா இருக்கு.
6.திரிதோஷம்னு சொல்லப்படுற வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகு (சுக்கு-மிளகு-திப்பிலி) சூரணத்த தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா போதும் .
7.திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தா இருக்கும்என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்