வெங்காய தோல் மூலம் இதய நோயை எப்படி தடுக்கலாம் தெரியுமா ?
பொதுவாக வெங்காயம் போலவே வெங்காய தோலை சமையலில் சேர்த்தல் நலம் மற்றும் சுவை சேர்க்கும் .நாம் பிரியாணி ,தக்காளி சாதம் ,போன்ற சமையல் செய்தாலும் ,கிரேவி செய்தாலும் அதில் வெங்காய தோல் சேர்த்தல் சுவை பலமடங்கு பெருகும் ..இதன் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.வெங்காய தோலை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்தால் அழற்சி பிரச்சினை குணமாகும் 2.மேலும் வெங்காய தோலில் தேனீர் தயாரித்து குடிக்கலாம் .
3.இந்த தேனீரை குடித்தாலே நம் கண் பார்வை தெளிவு பெரும் ,மேலும் இதில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது ,
4.சிலருக்கு முடி உதிர்ந்து கொண்டேயிருக்கும் .இந்த முடி உதிர்வை குறைப்பதில் வெங்காயத் தோல்கள் நல்ல பலனளிக்கின்றன.
5.இதற்கு முதலில் வெங்காயத் தோலை தண்ணீரில் ஊறவிடுங்கள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி ,தலை முடி வளரும் .
6.மேலும் இதய நோயாளிகளுக்கு வெங்காயத்தோல்கள் நல்ல பலனை கொடுக்கும் .
7. இதற்கு முதலில் வெங்காயத் தோலைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போடவும் ,பின்னர் , வெந்நீரில் இந்த தோலை கொதிக்க வைக்கவும். அதன் பின் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறைந்து நம் ஆரோக்கியம் மேம்படும்