முசுமுசுக்கைக்கீரையுடன் நல்லெண்ணெய் சேர்த்து தேய்த்து கொண்டால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?
பொதுவாக முசுமுசுக்கை க்கீரை முக்கியத்துவம் வாய்ந்தது .இந்த கீரையில் நிறைய ஆரோக்கியம் உள்ளது இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த கீரை நமக்கு உண்டாகும் சளி ,இருமல் ,மூச்சிரைப்பு என்ற ஆஸ்த்மா போன்ற நோய்களை வெல்ல உதவும் .
2.மேலும் முசுமுசுக்கை வேர் பசியை அதிகரிக்கும் .நஞ்சை நீக்கி ஆண்களின் ஆண்மை சக்த்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது .
3.மேலும் இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து தேய்த்து கொண்டால் கண் எரிச்சல் முதல் உடல் எரிச்சல் வரை குணமாகும் .
4.மேலும் சிலரின் வாந்தி குணமாக இந்த கீரையை காய்ச்சி குடிக்க வேண்டும் ,
5.சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம்.
6.தூதுவளையுடன் இந்த முசுமுசுக்கை பயன்படுத்தி சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம்.
7.10 தூதுவளை இலைகளை எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சளி இருமல் பிரச்சினைகள் நிரந்தரமாக நம்மை விட்டு ஓடி விடும்