நாம வேணாம்னு ஒதுக்கும் இந்த விதை ,சீனாக்காரனை நூறு வயசு வாழ வைக்குது

 
lotus

தேசிய மலரான தாமரை இந்தியாவில்தான் அதிகம் பயிராகிறது என்றாலும், தற்போது தெற்காசியக் கண்டத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் ஆச்சர்யமூட்டக் கூடியவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீனா மற்றும் கம்போடியாவில் தான் இவை அதிகமாகக் கிடைக் கின்றன. சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன. தாமரை விதையின் நன்மைகள் ஏராளம் இது கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக உள்ளது. சோடியம் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படுபவை இருக்கிறது. இது உங்கள் இதயத்திற்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதில் அதிகமான மெக்னீசியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் புரோட்டீன் நிறைந்துள்ளது. இதுபோன்ற நன்மை விளைவிக்கக் கூடிய விட்டமின்கள் மினரல்கள் போன்றவை அதிகமாக இருப்பதால் இது நிச்சயமாக ஆரோக்கியமான சிற்றுண்டியாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.நம்மில் பெரும்பாலானோர் இவற்றின் ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் எந்தளவுக்கு இவற்றை உண்ணலாம் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கின்றோம் என்பதே உண்மை. அவை குறித்து இங்கே பார்ப்போம்.

ஊட்டச்சத்தின் அளவு

100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன.

தாமரை விதையின் பலன்கள்

வயிற்றுப்போக்கு

நீண்ட, நாள்பட்ட வயிற்றுப்போக்கைத் தடுக்க உதவுகிறது. எனவே, மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இதை உட்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

இதய நோய்கள்

நமது உடலில் குறைந்தளவு மக்னீசியம் இருந்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன.

ரத்த அழுத்தம்

தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.

ஆன்டிஏஜிங் பண்புகள்

இவற்றில் செல் முதிர்ச்சி அடைவதைத் தாமதப்படுத்தும் என்சைம்கள் உள்ளன. மேலும், சேதமடைந்த புரதங்களுக்கு இந்த என்சைம்களை அளித்து உதவவும் செய்கின்றன. இதன் காரணமாக, பல அழகு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களில் தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்களைச் சேர்க்கின்றன.

மனச்சோர்வு குறைக்கும் காரணி

இவை மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன. அமைதியின்மை மற்றும் பதற்றத்துடன்கூடிய மனஅழுத்தம் ஆகியவற்றுக்குப் பாரம்பர்ய சிகிச்சைகளில் தாமரை விதை பயன்படுத்தப் படுகிறது.

எலும்புகளுக்கு பலம் சேர்க்கும்


கால்சியம் என்பது எலும்பை வளமாக வைத்திருக்க உதவுகிறது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த தாமரை பொறியில் கால்சியம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. இது நம் எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதளவில் உதவி செய்கிறது. எலும்பு ஆரோக்கியமாக இருந்தாலே நம் உடலும் சக்தியுடன் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

​சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கிறது


இந்த தாமரை விதையில், அதிகமான புரோட்டின் மற்றும் ஓரளவுக்கு கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் குறைவாக கிளைசெமிக் உள்ளது. இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் எனபடுவது சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க பெருமளவு உதவுகிறது. இது இதில் குறைவாக உள்ளது இது நிச்சயம் குறைவாக இருந்தால் மிகவும் நன்மை என்று கூறுகிறார்கள். மேலும் இதில் உள்ள அதிகமான மெக்னீசியம் மற்றும் குறைவான சோடியம் என்பது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

​உடல் எடையை குறைக்க உதவுகிறது


பொதுவாகவே உடல் எடையை குறைப்பவர்கள் தங்களது நொறுக்கு தீனிகளை ஆரோக்கியமானதாக மாற்றவேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி நொறுக்குத் தீனிகளை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த தாமரை பொறி ஆனது மிகவும் முக்கிய பங்கு வகிப்பது. இதில் புரோட்டின் அதிகமாக இருக்கிறது. புரோட்டின் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் தேவைப்படும். இது குறைவான கலோரி. இதில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவி செய்கிறது. இதில் குறைந்த அளவிலான சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கிறது. இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

​அஜீரணத்தைப் போக்குகிறது


பலருக்கும் அஜீரணக்கோளாறு என்பது அதிகமாக இருந்துகொண்டிருக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து என்பது ஜீரண சக்தியை அதிகரித்து அஜீரண கோளாறை போக்குவதற்கு பெருமளவில் உதவி இருக்கிறது. நார்ச்சத்து என்பது ஜீரண சக்திக்கு மிகவும் தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் என்பது ஜீரணத்திற்கு அதிகமாக உதவுகிறது. அஜீரண கோளாறு இருப்பவர்கள் இதை தினமும் தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக நல்ல பலன் அளிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறுகிறார்கள்.

உண்ணும் முறை

தற்போது எல்லா மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உலர்ந்த தாமரை விதைகள் கிடைக்கின்றன.அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து சூப்புகள், சாலட்டுகள் அல்லது மற்ற உணவுகளில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளலாம். உலர்ந்த தாமரை விதைகளை பாப்கார்னைப்போல வறுத்துச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம்.