கொய்யா இலைகளை மென்று தின்றால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?
Feb 1, 2025, 04:30 IST1738364455000

பொதுவாக ஆங்கில வைத்தியத்தில் இருப்பதை போல ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்திய முறைகளை கொண்டு பல நோய்களை விரட்டலாம் அந்த முறைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வந்தால் பல் வலி பஞ்சாய் பறந்து போகும் .
2.உடல் உஷ்ணம் குறைய அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாகும் .
3. தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வந்தால் தேமல் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து விடும் .
4. 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் இருமல் குணாமாகும்
5. கொய்யா இலைகளை மென்று தின்றால் வயிற்று போக்கு குணமாகும்