அசைவத்துக்கு இணையான பலம் தரும் இந்த கடலை
பொதுவாக கடலைகளில் அசைவத்துக்கு இணையான பலம் நமக்கு கிடைக்கும் ,இந்த பதிவில் கொண்டை கடலை மூலம் என்ன மருத்துவ குணம் கிடைக்கும் என்று பார்க்கலாம்
1.கொண்டை கடலை ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
2. வயிற்றில் வரும் புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டை கடலைக்கு உள்ளது .
3.இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் உள்ளது
4.இந்த கொண்டை கடலையில் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும்
5.இவ்ளோ சக்த்தி மிகுந்த கொண்டை கடலையில் கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன.
6.மேலும் வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருப்பதால் அதிக நன்மை உண்டு .
7.மேலும் முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
8.இந்த கொண்டை கடலையை சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்
.