இனிப்பான உணவையே அதிகமா சாப்பிடுறவங்களுக்குத்தான் இந்த கசப்பான விஷயம்

 
health tips of kasappu foods

கசப்பான உணவுகளின் பலன்கள்: தோற்றம் நன்றாக இல்லை என்றால் அதன் சுவையும் நன்றாக இருக்க முடியாது என்று அவசியமில்லை. உணவில் கசப்பான மற்றும் நாவில் சுவைக்காத விஷயங்களுக்கும் இது பொருந்தும். கசப்பான விஷயங்களால் பயனே இல்லை என்று இல்லை. சொல்லப்போனால், கசப்பான சுவை கொண்ட பல விஷயங்களில் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் பல அம்சங்கள் உள்ளன.

கசப்பான ஆனால் சத்துக்கள் நிறைந்த சில உணவு வகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பெரிதும் உதவுகின்றன.

வெந்தய விதைகள்

வெந்தய விதையின் சுவை மிகவும் கசப்பாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கரையக்கூடிய உணவு நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. வெந்தய விதைகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் இது நல்ல பங்கு வகிக்கிறது. இதனுடன், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.

பாகற்காய்

பாகற்காய் (Bitter Gourd) மற்றும் அதன் சாறு மிகவும் கசப்பாக இருக்கும். ஆனால் அவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறன. பாகற்காயில் வைட்டமின் , வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நல்ல பங்கு வகிக்கின்றன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கும்.

bitter foods that are super healthy

க்ரீன் டீ

க்ரீன் டீயின் (Green Tea) சுவை கசப்பாக இருக்கிறது. முதலில் இது குடிப்பவர்களுக்கு பிடிக்காமல்தான் இருக்கும். ஆனால் இதை குடித்தால், ஒன்றல்ல, இரண்டல்ல, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பாலுடன் சர்க்கரை கலந்த இனிப்பு தேநீருக்கு பதிலாக பதிலாக கிரீன் டீ பக்கம் மக்கள் மாறுவதற்கு இதுவே காரணம்.

கிரீன் டீ உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக உள்ளது. இதனுடன் இதை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள பாலிபினால்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.

காய்கறிகளாக உண்ணப்படும் இலைகள்

சில கீரை வகைகள் கசப்பான அல்லது துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளன. ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.

காலே
கீரைகளிலேயே மிகவும் ஆரோக்கியமான கீரை என்றால் அது காலேதான். இது முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காய்கறி ஆகும் மேலும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருளாகும். குர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரோல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் இது புற்றுநோயை தடுப்பதுடன் வயதாவதையும் தள்ளிப்போடுகிறது. இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதுடன் உடலில் இருக்கும் புற்றுநோய் கட்டிகள் வளர்வதையும் தடுக்கும்.


டேன்டேலியன் கீரைகள்

டேன்டேலியன் கீரைகள் உண்மையில் என்னவென்று உங்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது?. டேன்டேலியன் கீரைகள் அதன் மருத்துவ குணங்களுக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உங்கள் காயத்தை வேகமாக குணப்படுத்துவதுடன் உங்க இரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது. இது செரிமானத்தை ஊக்குவிப்பதுடன் பித்தப்பை கோளாறுகளையும் தடுக்கிறது.

கோகோ
கோகோ பீன்ஸ்களில் இருந்து தயாரிக்கப்படும் கோகோ அதிலிருக்கும் கொழுப்புக்களை நீக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மிகவும் கசப்பாக இருக்கும் இதில் துளியும் இனிப்பு சுவையிருக்காது. பாலிபீனால் அதிகமிருக்கும் இது வீக்கத்தை குறைக்கும் பண்பு கொண்டது. இது நல்ல கொழுப்பை அதிகரிப்பதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.


ரெட் ஒயின்
அதிக கசப்பு சுவை கொண்ட மது வகையை சேர்ந்த பாலிபீனால் அதிகமிருக்கும் ரெட் ஒயின் உங்கள் இதயத்தை பாதுகாக்கும். தினமும் ஒரு கிளாஸ் ரெட் ஒயினை குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிப்பதுடன் உங்கள் வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால் இதனை குறைந்த அளவில் குடிப்பது மட்டுமே சிறந்தது.

டார்க் சாக்லேட்

இளைஞர்கள் சாக்லேட் (Chocolate) சாப்பிட விரும்புகிறார்கள். எனினும், பலர் டார்க் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். ஏனெனில் டார்க் சாக்லேட் சாப்பிட மிகவும் கசப்பாக இருக்கும். ஏனென்றால், கோகோ செடியின் பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் கோகோ பவுடர் அதில் சேர்க்கப்படுகிறது.

ஆனால் கசப்பாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, பாலிபினால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் வீக்கத்தின் பிரச்சனையிலும் நிவாரணம் அளிக்கிறது.