இரு புருவத்திற்கு மத்தியில் தைலத்தை தேய்க்க எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

பொதுவாக பல்வலி இருந்தாலும் அதன் காரணமாக தலை வலி வருவதுண்டு .மேலும் சில ஒற்றை தலைவலியும் வருவதுண்டு .எந்த தலைவலியாக இருந்தாலும் நாம் உடனே செய்வது தைலம் தேய்ப்பதுதான் ,அந்த தைலத்தை பின்வரும் முறையில் தேய்த்தல் உடனடி நிவாரணம் கிடைக்க வழி செய்யும் .
1.தலைவலிக்கு தைலம் தடவுபவர்கள் நெற்றி பகுதியில் அழுத்தம் கொடுக்காமல் முதலில் இரண்டு முனைகளிலும் ஆள்காட்டி விரலை அழுத்தி கையை எடுக்காமல் தேய்க்க வேண்டும்.
2.இரண்டு புறமும் தேய்த்து முடித்த பிறகு நடுவில் இருக்கும் மூன்று விரல்களால் அப்படியே நெற்றி முழுவதும் தடவி வாருங்கள்.
3.பின்னர் ஆள்காட்டி விரலால் இரு புருவத்திற்கு மத்தியில் தைலத்தை வைத்து லேசாக முன்னும், பின்னுமாக தேய்க்க வேண்டும்.
4.இடமிருந்து வலமாக பத்து முறையும், வலம் இருந்து இடமாக பத்து முறையும் தேய்த்தால் தலைவலி எல்லாம் பஞ்சாய் பறக்கும்.
5.அதன் பிறகு உடல் முழுவதும் இருக்கும் வலியை நீக்க முழங்கையின் உட்புறம் முழங்காலின் உட்புறம் போன்ற இடங்களில் நன்கு தேய்க்க வேண்டும்.
6.இதில் இருக்கும் நரம்புகள் வழியாக தைலத்தில் இருக்கும் உஷ்ணம் உள்ளே சென்று உடல் வலியை வெகுவாக குறைத்து விடுகிறது.