பக்தர்கள் நாப்பத்தி எட்டு நாட்கள் விரதமிருப்பதால் ஆரோக்கிய நன்மை என்ன தெரியுமா ?
பொதுவாக நம் உடல் உறுப்புகளுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வினை கொடுத்து நோயின்றி இருக்கத்தான் நம் முன்னோர்கள் விரதம் என்று ஒன்றை கடை பிடித்தனர் . .இந்த விரதம் வாரம் ஒருநாளோ அல்லது மாதம் ஒரு நாளோ இருப்பதால் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.அடிக்கடி விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது.
2.அடிக்கடி விரதமிருப்பதால் ஜீரண உறுப்புகள் சீராகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
3.இந்த அடிப்படையில்தான் எல்லா மதங்களுமே விரத்தை முன்னிறுத்துகின்றன
4.ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலையிட்டு ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு போய் வருகிறார்கள்.இதில் நிறைய நன்மைகள் உள்ளது
5.எந்தவொரு விஷயத்தையும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டல காலத்துக்கு தொடர்ந்து செய்யும்போது, இயல்பாகவே அதற்கு நம் மனமும், உடலும் பழக்கப்பட்டுவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உளவியல் உண்மை.அதனால் மனமும் உடலும் சுத்தமாகின்றன
6.உடல் நலம், மன நலம், பொது நலம் கலந்த விரதங்களை அதன் புராதன கதைகளை மட்டும் கேட்டு புரிபடாமல் விட்டுவிடாமல், அதன் காரணங்களை அறிந்து, அதற்குள் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து பின்பற்றினால், இந்த உலகமே புதிதாய் மாறும் என்று நம் சித்தர்கள் விரதம் இருக்க சொன்னார்கள்