கண் பார்வைக்கு நன்மை செய்யும் இந்த கிழங்கு பற்றி தெரியுமா ?
பொதுவாக சிலருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் ,நம் உடலை பராமரிக்க இதுதான் சரியான நேரம் என்று சிலர் எடுத்து கொண்டு உடலை ஆரோக்கியமாய் பராமரிப்பது உண்டு . சர்க்கரை வள்ளி கிழங்கு நம் உடலுக்கும் சுகர் பேஷண்டுக்கும் எப்படி நன்மை சேர்க்கும் என்று இப்பதிவில் நாம் காணலாம் .
1.இது மலசிக்கல் பிரச்சினையையும் ,மலக்குடல் புற்று நோய் வருவதையும் தடுக்கும் .
2.சர்க்கரை வள்ளி கிழங்கு மூலம் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் .
3.சிலருக்கு சுகர் உயர்ந்து காணப்படும் .சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள கலவைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
4.சுகர் பேஷண்டுகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நீங்கள் வேகவைத்துச் சாப்பிடும் பொழுது அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருக்கும்.
5.இது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காமல் காக்கும்
6.சிலருக்கு கொழுப்பு கூடி காணப்படும் .சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பை குறைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது.
7.கெட்ட கொழுப்பால் வரும் உங்களுடைய இதய பிரச்சினைகளை இந்த கிழங்கு குறைக்கும்.
8.சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ காணப்படுகிவதால் நம் கண்பார்வைக்கும் இது நல்லது .