இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நேரும் மாற்றம் .
பொதுவாக நெல்லிக்காய் பலதொற்று நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கும் .அதனால் நெல்லிக்காயை எந்த வடிவத்திலாவது நாம் தினம் சேர்த்து கொள்ள வேண்டும் .நெல்லிக்காய் மூலம் நாம் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. ஊறுகாய் அல்லது சட்னி அல்லது பொடி அல்லது தேநீர் போன்ற வடிவத்தில் நாம் சேர்த்து கொண்டால் பல நோய்கள் நம்மை தாக்காமல் தப்பலாம் .மேலும் நம் எடை குறைப்பிற்கும் இது வழி செய்யும் .
2.ஓர் துண்டு இஞ்சி மற்றும் ஒரு துண்டு நெல்லிக்காயை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.
3.ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.
4.நெல்லி தேநீர் தயாரிக்க ,முதலில் கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிப்பொடி மற்றும் வெல்லம் சேர்த்து தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
5.நெல்லிக்காயை மிட்டாய் போன்றும்,ஊறுகாய் வடிவிலும் சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
6.நெல்லி பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.
7.நெல்லியை தினமும் சாறு போன்று 1 கிளாஸ் அளவு குடித்து வந்தால் தொப்பை முதல் செரிமான கோளாறுகள் வரை தீர்வுக்கு வந்து விடும்.