அகத்திக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் எந்த நோயெல்லாம் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக கீரைகளில் இரும்பு சத்து அடங்கியுள்ளது .இந்த கீரைகளின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1. அகத்தி கீரையை நாம் உணவில் சேர்த்து வந்தால் நம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் .
2.மேலும் இந்த கீரை மல சிக்கலை போக்கி நம் உணவை சீரணிக்க வைத்து நம் பித்தத்தை தணிக்கிறது
3.இந்த கீரையின் பூவை கூட சமைத்து சாப்பிடலாம் .மேலும் பற்கள் ,இருதயம் ,மூளை நலம் பெற இது உதவுகிறது
4..மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி நம் ஆரோக்கியம் காக்கிறது .
5.அகத்திக் கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு வரவே வராது .
6.அகத்திக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் புண்ணிலிருந்து நிவாரணம் கிடைக்கும் .
7.அகத்திக் கீரையை வேக வைத்த தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஓடி போய் விடும் 8.அகத்திக்கீரை மணத்தக்காளி கீரை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் இருந்த இடம் தெரியாது .