ஆடாதோடை பொடி சாப்பிட்டால் பொடி பொடியாகும் நோய்கள்

 
asthma asthma

பொதுவாக  சித்த மருத்துவதத்தில் பயன்படும் ஆடாதொடை இலைகளை பறித்து கஷாயம் வைத்து குடிக்க எந்த நோயெல்லாம் பறந்து போகும்னு இப்பதிவில் காணலாம்
1.ஆடாதோடை இலை மேல் சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, நெஞ்சில் கபம், அலர்ஜி, ஆஸ்துமா என எல்லா விதமான கபம் சம்பந்தப்பட்ட நோய்க்கும் நல்ல சிகிச்சையாக  இருக்கும் .
2.மேலும் இதன் மூலம் கபம் மட்டும் இல்லாம, இரத்தக் கொதிப்பு, பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு, பிரசவித்தப்பின் உதிரப்போக்கு குறையும்  
3.கர்ப்பப்பை வலுப்படவும் கூட ஆடாதோடை ரொம்ப உதவியா இருக்கு.

honey

4.ஆடாதொடை இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரில் தேன் கலந்து பருகி வர ஆஸ்துமா, சளி இருமல் காய்ச்சல் போன்ற கடுமையான நோய்கள் கூட  குணமாகும்.
5.மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டோர் ,ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் மஞ்சள் காமாலையில் இருந்து குணமாகலாம்.
6.ஆடாதோடை இலையை தினம் பறித்து கொண்டு வர வேண்டாம் .அந்த இலைகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கிப் பின் மெல்லிய துணியில் சலித்து எடுத்துக்கொண்டு பாத்திரத்தில் போட்டு மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
7.உணவுக்குப் பின்னர் இந்தப் பொடியை தினமும் மூன்று வேளை ஒரு டீஸ்பூன் அளவு மிதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் பல நோய்களை விரட்டியடிக்கலாம்