இஞ்சியுடன் தேன் சேர்த்து உண்டால் நம் உடலில் நேரும் மாற்றம்
பொதுவாக உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர் .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதற்காக பலர் லட்சக்கணக்கில் செலவு செய்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர் .
2.இன்னும் சிலரோ உடல் எடையை குறைப்பதாக வரும் போலியான விளம்பரங்களை நம்பி ,போலியான சிகிச்சையில் சிக்கி உயிரிழந்து வரும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது .
3..முதலில் இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, சாறு எடுத்து கொள்ளவும் .
4.பின்னர் , அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்
5.இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரித்து எடை குறைய உதவும்
6.அடுத்து இயற்கையாக மலிவாக கிடைக்கும் கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.