வெற்றிலை சாறுடன் இஞ்சி சாறு சேர்த்து கொடுத்தால் எந்த நோய் சரியாகும் தெரியுமா ?
பொதுவாக இந்த காலத்தில் வெற்றிலை போடும் பழக்கம் மறைந்தே போய் விட்டது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.இந்த வெற்றிலையால் சளி தொல்லை ,அல்சர் ,இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் தொற்று போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது,.
2.மேலும் வெற்றிலை சாறுடன் இஞ்சி சாறு சேர்த்து கொடுத்தால் நுரையீரல் பிரச்சினைகள் காணாமல்போகும் .
3.தீப்பட்ட புண்ணுக்கு வெற்றிலை சாறு சிறந்த மருந்து .மேலும் மூட்டு வலி ,தலை வலி போன்ற வலிகள் உள்ள இடத்தில் வெற்றிலை சாறு தடவினால் அந்த வலிகள் காணாமல் போகும் .
4.மேலும் வெற்றிலை கஷாயம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் .
5.சுலபமாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கசாயம் இது. கூடுதலாக வாய் துர்நாற்றம் மற்றும் செரிமாணக் கோளாறுகளையும் போக்கும் அற்புதமான கசாயம் இது.
6.வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் .பிறகு அதை தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விட்டு மிளகு, கிராம்பு சுக்கு தூள் சேர்க்கவும்.
7.இப்போது தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
8.பாதியாக சுண்டிய கசாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி கசாயமாக குடிக்கவும்.இதனால் பல நோய்கள் குணமாகும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது