பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை தடுக்கும் இந்த பூ
பொதுவாக வாழை பூ முதல் வாழை தண்டு வரை நமக்கு மருத்துவ பலன்களை அள்ளி கொடுக்கிறது இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. வாழைப்பூவில் நமது வயிறும் குடலும் நலன் காக்க ஏராளமான பலன்கள் உள்ளது .
2.இதில் கால்சியம் ,மெக்னிசியம் ,பாஸ்பரஸ் ,மற்றும் ஏராளமான விட்டமின்களும் அடங்கியுள்ளன 3.வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொறியலாகவோ சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் 4.பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு முதல் வெள்ளைப்படுதல் வரை இந்த பூ மூலம் சரியாகும் 5.இதை வாரமிருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்புகள் கரையும் .
6.சிலருக்கு வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள் ஆகியவை இருந்து தொல்லை கொடுக்கும் .இவை குணமாக வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7.மேலும் வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளை சீரமைக்கும் ஆற்றல் கொண்டது இந்த பூ .
8.வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
9.மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு வாழைப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.