மஞ்சள் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நாம் சிலவகை உணவுகளை அவசியம் அடிக்கடி சேர்த்து கொள்வது நலம் ,மேலும் லிவரை பாதுகாக்கும் வழிகளை பார்க்கலாம்
1. பூண்டு ,பீட்ருட் ,பச்சைக்காய்கறிகள் ,ஸ்டராபெரி ,ஆலிவ் ஆயில் ,போன்ற பொருட்கள் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் .
2.நம் உணவில் தினம் சேர்க்கும் வெங்காயம் நமது கல்லீரலை பாதுகாக்கும் முக்கிய உணவாக கருதப்படுகிறது.
3.வெங்காயத்தில் இருக்கும் அதிகப்படியான கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் நமது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது.
4.தினம் சமையலில் சேர்க்கும் மஞ்சள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த மூலிகை.
5.மஞ்சள் அதிகப்படியான கல்லீரல் நச்சுக்களை அகற்றுவதில் சிறந்தது.
6.இந்த மஞ்சள் ,ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கல்லீரல் பாதிப்பை நிர்வகிக்க உதவுகிறது.
7.இந்த மஞ்சள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரலை பாதுகாக்கிறது.
8.மேலும் மஞ்சளின் குர்குமின் கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.