தைராய்டு கோளாறுகளை குணப்படுத்தும் இந்த பாசி

 
thyroid

பொதுவாக  கடலுக்கு அடியில் வளரும் கடல் பாசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.இந்த கடல் பாசியின் ஆரோக்கிய நன்மை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  .
1. இது ரொட்டி ,பாலாடை கட்டியை பதப்படுத்தவும் ,இறைச்சி வகைகளை டின்களில் அடைத்து வைக்கவும் பயன்படுகிறது .

2.கடல் பாசியில் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும் சத்துக்கள் அடங்கியுள்ளது

3.சிலர் தைராய்டு கோளாறால் கருத்தரிக்க முடியாமல் இருப்பர் .

thyroid
4.அவர்கள் கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருப்பதோடு கருவும் சீக்கிரம் உண்டாகும் .

5.சிலர் கொலஸ்ட்ரால் பிரச்சினையால் நிறைய மாத்திரை எடுத்து கொள்வர் ,
6.அவர்கள் கடல் பாசியில் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்டிரால் குறைவதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும். மேலும் உடல் எடையை குறைக்க உதவும் .வயிறு பிரச்சினை வராமல் பாதுகாக்கும்
7.நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் அடிக்கடி கடல்பாசியைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு நீரிழிவையும் கட்டுப்படுத்தி நம் ஆரோக்கியத்தை காக்கும்