ஆடாதொடா இலைகளை கொதிக்க வைத்த நீரை அருந்த எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக பருவ நிலை மாற்றத்தால் சளி அலர்ஜி மற்றும் தொண்டை வலி ,புண் போன்றவை உண்டாகும் .இதற்கு பல இயற்கை தீர்வுகள் உண்டு .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதற்கு வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து தினம் இருமுறை தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க நல்ல தீர்வு உண்டு .
2.அந்த உப்பு நீர் பத்து செகண்ட் தொண்டையில் நிறுத்த வேண்டும் .
3.அடுத்து இஞ்சியை துண்டு துண்டாக வெட்டி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அந்த தண்ணீரை தினம் பலமுறை குடித்து வரலாம் .
4.அடுத்து கொஞ்சம் மிளகு தூளுடன் மஞ்சள் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிடலாம் ,
5.அடுத்து மஞ்சள் பாலில் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க தொண்டையில் உண்டாகும் அலர்ஜி குணமாகும் ,
6.துளசி மற்றும் ஏலக்காயை சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்த தொண்டைவலி குணமாகும் .
7.கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகளை சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்த தொண்டை வலி குணமாகும் .
8.ஆடாதொடா இலை, நொச்சி இலை ஆகியவற்றுடன் சிறிது மிளகு தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க தொண்டை அலர்ஜி காணாமல் போகும்