தினம் நள்ளிரவில் எழுந்திருக்கிறீங்களா ?அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்
பொதுவாக இந்தியாவில் 30 சதவீத மக்கள் தூக்கமின்மை பிரச்சினையில் சிக்கி தவிப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது .இதற்கு என்ன காரணம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.சிலருக்கு உடலில் ஏதாவது கோளாறு இருந்தாலும் ,இந்த பிரச்சினை வரும் .
2.இன்னும் சிலரோ இரவில் அதிக காரமான உணவு உண்டாலும் ,வயிறு முட்ட சாப்பிட்டாலும் வயிறு கோளாறு ஏற்பட்டு இந்த தூக்கமின்மை பிரச்சினையால் அவதி படுவர் .
3.இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வு யோகா மற்றும் தியானம்தான் .
4.பொதுவாக, இந்த இன்சொம்னியாவில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் இரவில் எழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
5.ஆனால் தினமும் அதிகாலை 1 முதல் 3 மணிக்குள் எழுந்திருப்பது உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
6.மனஅழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளவர்கள் ஒவ்வொரு இரவும் அந்த நேரத்தில் எழுந்திருப்பார்கள்.
7. மருந்துகள் உபயோகிப்பவர்கள், சுகர், பிபி, இதய நோய்கள் உள்ளவர்கள் நடுநடுவே எழுந்து விடுகிறார்கள். இருப்பினும், மருந்துகளின் பயன்பாடு தவிர வேறு காரணங்களால் நீங்கள் நன்றாக தூங்கவில்லை என்றால், அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.