வேப்பிலை கொழுந்தை துளசியோடு சேர்த்து தேய்ச்சா ,தலையில் நடக்கும் அதிசயம்
பொதுவாக இந்த பொடுகு பிரச்சினைக்காக பலர் கண்ட ஷாம்பு மற்றும் க்ரீம்களை வாங்கி உபயோகித்து பணத்தை செலவழிக்கின்றனர் .ஆனால் இதனால் நிறைய பக்க விளைவுகளையும் சந்திக்கின்றனர் .எனவே இந்த பொடுகுக்கு நம் பாட்டிகள் சொன்ன வைத்தியம் சிலவற்றை கூறுகிறோம் .
1.வெந்தயத்தினை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சேர்த்து தேய்த்து குளித்தால்
பொடுகு ஓடிவிடும் ,
2.அடுத்து பாசிப்பயறுடன் தயிர் சேர்த்து கூட தேய்க்கலாம்
3 : தீராத பொடுகு பிரச்சினையை அனுபவிப்போர் பாலுடன் சிறிதளவு மிளகு தூள் கலந்து தலையில் நன்கு தேய்த்து விடவும்
4.பின்பு 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் சிகைக்காய் கொண்டு தலைக்கு குளித்து வந்தால் போதும் பொடுகு இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்
5 : பொடுகு தொல்லையால் எந்நேரமும் தலையை சொறிந்து கொண்டேயிருப்போர் சுத்தமான வெந்தயத்தை அரைத்து பொடி செய்து விடவும்
6.அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பறந்தே போய் விடும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்
7 : பொடுகு தொல்லையால் எப்போதும் கடு கடுவென்று இருப்போர் வேப்பிலை கொழுந்தை துளசியோடு சேர்த்து நன்கு அரைத்து விடவும்
8.அதை சாறு பிழிந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து சீயக்காய் போட்டு குளித்து வந்தால் பொடுகும் உடல் உஷ்ணமும் நீங்கி புத்துணர்வோடு இருக்கலாம்