ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகும் இப்பொருள்
பொதுவாக இன்றைய இளைய சமுதாயம் மேற்கத்திய கலாச்சரத்துக்கு அடிமையாகி நம் பாரம்பரிய உணவையெல்லாம் ஒதுக்கி தள்ளியதால் இன்று இளம் வயதிலேயே பல ஹாஸ்ப்பிட்டலில் குடியிருக்கின்றனர் .அப்படி நாம் மறந்து போன ஒரு உணவு பிரண்டை .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதை துவையலாகவோ ,சட்னியாகவோ உணவில் சேர்த்து வந்தால் இதன் பலன்கள் ஏராளம் .
2.இது ரத்த மூலம் ,கை கால் குடைச்சல் ,வாயு பிடிப்பு ,இரைப்பை அலர்ஜி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற நம் உடலில் உண்டாகும் பல நோய்களுக்கு மருந்தாக பயன் படுகிறது .
3.மேலும் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கும் ,
4.மேலும் இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும்.மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
5. எலும்பு தேய்மானம் பிரச்சனை உள்ளவர்கள் பிரண்டையை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. 6.எலும்பு முறிவால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை வாரம் மூன்று முறை உணவில் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்புகள் வேகமாக கூடும், எலும்புகள் பலம் பெரும்.
7.பிரண்டை தண்டுகளை நன்கு அரைத்து அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களாலால் அவதிபடுபவர்கள் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.