பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் என்ன நன்மை தெரியுமா ?

 
greens

பொதுவாக பாசிபயிரில் கொழுப்பு இதில் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது சிறந்த உணவுப்பொருள் .அதிலும் பெண்கள் இதை அதிகம் எடுத்து கொண்டால் இடுப்பு வலி முதல் மூட்டு வலி வரை வராமல் தடுக்கலாம் .இந்த பயிரின் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.பாசிப்பயறில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை இரத்த சோகையை வராமல் நம்மை பாதுகாக்கிறது
2.சிலருக்கு உடல் உஷ்ணத்தால் அம்மை நோய் வரும் .இந்த சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுத்தல் நலம் .
3.அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கல் சிலரை தாக்கும் .அவற்றை  குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக செயல் படுகிறது

pasi payaru
4.மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகளான ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்கள் குணமாகும்
5.மேலும் ஞாபக மறதி சிலருக்கு இருக்கும் .அவர்கள் பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.
6.பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள்  கூறுகின்றனர்.