குடி தண்ணீரில் படிகாரம் கலந்து வாய் கொப்பளிக்க எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
teeth

பொதுவாக வீட்டு வைத்தியத்தில் படிகாரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகிறது. பழங்காலத்திலிருந்தே படிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த படிகாரத்தின் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.அந்தக் காலத்திலும் படிகாரம் பல வகையான வலிகளை நீக்கும் தைலமாக வேலை செய்தது.
2.படிகாரத்தில் பல நன்மைகள் உள்ளன. பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் படிகாரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

3.பல் வலியுள்ளோருக்கு படிகாரம் மிகவும் நன்மை பயக்கும். குடி தண்ணீரில் படிகாரம் கலந்து வாய் கொப்பளிக்க பல் வலி நிவாரணம் கிடைக்கும்.

4.உடலில் அடிபட்டு  காயம்பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால், இரத்தப்போக்கு நின்றுவிடும்..இந்த அதிசய சக்தி படிகாரத்துக்கு உண்டு .மேலும் அதில் நோய் தொற்று ஏற்படாமல் அது பாதுகாக்கும்

padikaram

5. படிகாரப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால், சிறிது நேரத்தில் இருமல் நிவாரணம் கிடைக்கும்.மேலும் இதை வாயில் கொப்பளித்தால் வாயில் உள்ள புண் குணமாகும்

6.படிகார நீரில் முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தை சுத்தம் செய்யலாம். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து சரும பிரச்சினைகள் தீர்க்கிறது

7. படிகார நீரில் தலையை கழுவினால் முடியின் வேரில் இருந்து சுத்தமாகும். தூசி மற்றும் அழுக்கு வெளியேறும். இதற்கு  பேன்களையும் கொல்லும் ஆற்றல் உள்ளது